என்எல்சி எதிராக பாமக கலவரம்… அன்புமணி ராமதாஸ் கைது…! 

நெய்வேலி என்எல்சி நிறுவனம் வளையமாதேவி கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் என்எல்சி நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேறக் கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி ஆர் சி கேட் முன்பு பாமக அன்புமணி ராமதாஸ் முற்றுகை போராட்டம் நடைபெற்றது

அப்போது காவல்துறையினர் என்எல்சி அலுவலகத்திற்கு செல்ல விடாமல் ஆர்ச்சி கேட்டு முன்பு தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்கள், காவல்துறையினரை தள்ளிவிட்டு செல்ல முயற்சித்தனர் அப்போது காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தும் போது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

பின்னர் போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனம் மீது கல்வீசி கண்ணாடிகளை உடைத்தனர் காவல்துறையை நோக்கியும் கல்லை  வீசினர் இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது  காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர் பின்னர் கண்ணீர் புகைகுண்டும் வீசினர்

நெய்வேலி ஆர்ச் கேட்டு மற்றும் வடலூர் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டனர் பின்னர் காவல் துறையினர் பாமக அன்பு ராமதாஸ் உட்பட முப்பதுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்க்கு கொண்டு சென்றனர்

போராட்டக்காரர்கள் காவல்துறை மீது கல்வீசியதில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்ததனர் அவர்களை நெய்வேலி என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் நெய்வேலி ஆர்ச்சி கேட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது மேலும் பண்ருட்டி- கும்பகோணம் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *