#Raid அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை எந்த ஆவணங்களையும் எடுத்து செல்லவில்லை…  

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் 14 மணி நேரம் 30 நிமிடம் நடைப்பெற்ற சோதனை நிறைவு பெற்றது  – எந்த ஆவணங்களும் எடுத்துச் செல்லப்படவில்லை

தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சராகவும், திமுக மாநில துணை பொது செயலாளராகவும் உள்ளார். அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடுகளில் இன்று காலை முதல் சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வந்தனர். 

விழுப்புரம் சண்முகபுரம் பகுதியில் உள்ள வீட்டில் இன்று காலை 8 மணி முதல் ஒரு பெண் அதிகாரி உட்பட ஏழு பேர் கொண்ட அமலாக்க துறையினர் மத்திய பாதுகாப்பு வீரர்களின் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் வீட்டின் கீழே தளம், முதல் தளம் என அனைத்து பகுதிகளிலும் தங்களுடைய சோதனையை தீவிரப்படுத்தி வந்தனர். 

அப்பொழுது வீட்டில் இருந்த இரண்டு பீரோ மற்றும் ஒரு லாக்கரை திறக்க முடியாமல் பூட்டு செய்யும் ஊழியரை மாற்று சாவி மூலம் திறக்க முயற்சி செய்து அழைத்து வந்தனர் ஆனால் அவரால் திறக்க முடியவில்லை என்று சென்று விட்டனர். தொடர்ந்து நடைபெற்று வந்த சோதனை இரவு 10:30 மணி அளவில் நிறைவு செய்து அமைச்சர் பொன்முடி  வீட்டில் இருந்து வெளியேறினார். 

இந்த சோதனையானது 14 மணி நேரம் 30 நிமிடம் நடைபெற்றது.  பொன்முடி வீட்டில் இருந்து எந்த ஆவணங்களும் எடுத்து  செல்லவில்லை. அமலாக்கத்துறையினர் கொண்டு வந்த லேப்டாப் உள்ளிட்டவைகளை  மட்டுமே மீண்டும் எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான விழுப்புரத்தில் உள்ள கயல், பொன்னி ஏஜென்சி நிறுவனம், விக்கிரவாண்டில் உள்ள சூர்யா பொறியல் கல்லூரிகளிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *