விலையை கேட்டால் கண்ணீரை வரவழைக்கும் சின்ன வெங்காயம்…!

திண்டுக்கல்லில் புதிய உச்சத்தை தொட்ட சின்ன வெங்காயம் கிலோ 170 க்கு விற்பனை, தொடர் மழை காரணமாக தட்டுப்பாடு ஏற்படும் அபாயம். 

திண்டுக்கல்லில் வெங்காயத்திற்கு என்று தனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது இங்கு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் மார்க்கெட் செயல்படும் இந்த வெங்காய மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், தேனி, திருச்சி, கோவை, திருப்பூர், பெரம்பலூர் அரியலூர் உட்பட பல மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம் அதேபோல் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு வருவது வழக்கம்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தற்பொழுது தான் வெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடவு செய்யப்பட்ட வெங்காயம் ஆகஸ்ட் மாதத்தில் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வரும். தற்பொழுது மைசூரில்  இருந்து தான் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது ஆனால் அங்கு  தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதாலும் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது 

தற்பொழுது 50 கிலோ எடை கொண்ட 1,000 பைகள் மட்டுமே நேற்று விற்பனைக்கு வந்துள்ளது இதன் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து கிலோ 170 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது மேலும் தற்பொழுது ஆந்திராவில் இருந்து சிட்டு என்ற சின்ன  வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. கிலோ  55முதல் 60 வரை விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதனை வாங்கிச் செல்கின்றனர். 

தரமான வெங்காயத்தை 170 க்கு வாங்கி செல்லும் சில்லறை வியாபாரிகள் போக்குவரத்து செலவு ஏற்று கூலி இரத்தக்கூலி லாபம் உட்பட 190 முதல் 200 வரை விற்பனை செய்கின்றனர் ஆனால் அதிக விலை கொடுத்து வாங்க பொதுமக்கள் முன் வராததால் வெங்காய விற்பனை மந்தமாக உள்ளது தொடர் மழையின் காரணமாக வெங்காயம்  வரத்து குறைவாக இருந்தாலும் விற்பனையும் குறைவாக உள்ளது வரக்கூடிய வெங்காயமும் மழையின் காரணமாக சேதமடைந்து வருகிறது. 

இதனால் மேலும் விலை உயரும் அபாயம் உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மழை பெய்து வந்தால் செடியிலேயே வெங்காயம் அழுகக்கூடிய நிலை உள்ளது ஆகையால் தமிழகத்தில் வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *