எங்களுக்கு எதிரா பேசினா அது அவர்களோட சொந்த கருத்து… எஸ்கேப் ஆகும் அண்ணாமலை

annamalai

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என நானே கூறியுள்ளேன், ஆனால் ஜி.யூ.போப் மொழியாக்கம் செய்த திருக்குறள் குறித்து பேசியிருப்பது ஆளுநரின் சொந்த கருத்து என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

கோவை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஜனாதிபதிக்கு எழுதிய முதல்வரின் கடிதம் அவரது தோல்வி பயத்தை காட்டுவதாக எனத் தெரிவித்துள்ளார்.  

மேலும் முதல்வர் கண்ணாடியில் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும், இல்லாத பிரச்சனைக்கு எல்லாம் ஆளுநர் தான் காரணம் என்பது போன்ற வகையில் அவரது கடிதம் உள்ளது.  

ஆளுநர் அமைச்சரை நீக்கம் செய்வது குறித்து கூறுகிறார்கள், ஆனால் அது டெக்னிக்கல் பிரச்சனை, அது குறித்து ஆராய நேரமும், காலமும் உள்ளது.  மேலும் தமிழகத்தில் ஆளுநரை மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள், ஆளுநர் இவர்கள் எழுதிகொடுப்பதை தான் பேச வேண்டும் என சட்டம் உள்ளதா? 

நான் கொடுத்ததை ஆளுநர் படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறுகிறார்கள், ஒரே வேலை அவ்வாறே படிக்க வேண்டும் என்றால், அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறியிருப்பார்கள், ஆனால் ஏதும் இல்லை.  எங்கே எல்லாம் பொய் இருக்கிறதோ அங்கே உள்ளதை ஆளுநர் படிக்கவில்லை, அவ்வாறு இல்லாததை கூறினால் ஆளுநர் கிளிப்பிள்ளையை போல ஆகிவிடுவார். கடிதத்தில் முன்னுக்கு பின் முரணாக நிறைய கருத்துகள் உள்ளது. 

கடிதத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள போவது கிடையாது. மேலும் வரும் தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெரும், மூன்றாவது முறையாக தற்போதைய பிரதமர் ஆட்சியமைக்க போகிறார். அந்த இயலாமையை தான் கடிதம் காட்டுகிறது தவிற எந்த உண்மையையும் நான் பார்க்கவில்லை. சிதம்பரம் கோவில் விவகாரத்தில், இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டது குறித்து ஆளுநர் மட்டும் கூறவில்லை, 

அங்கு விசாரணை  மேற்கொண்ட, மத்திய அரசு அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் தான். அதில் தவறு என ஆளுநர் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும். அரசு அமைப்பு கூறியதே தவறா? ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என நானே கூறியுள்ளேன், ஆனால் ஜி.யூ.போப் மொழியாக்கம் செய்த திருக்குறள் குறித்து பேசியிருப்பது ஆளுநரின் சொந்த கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *