நாளை முதல்  82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை… அமைச்சர் அறிவிப்பு…!

tomato

நாளை முதல் நியாய விலை கடைகள் மற்றும் பண்ணை பசுமை மையங்களில் உள்ளிட்ட 111 மையங்களில்  தக்காளி 60 ரூபாய் விலையில் கிடைக்க ஏற்பாடு- அமைச்சர் பெரிய கருப்பன் 

சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார், தக்காளியின் விலை உயர்வாக இருபதின் அடிப்படையில் மேலும் விலை அதிகரிக்காமல் இருக்க ஆக்கபூர்வமான ஆலோசனை நடத்தி உள்ளோம், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பண்ணை பசுமை கடைகளில் கூடுதலாக  அதிகரித்து மக்களுக்கு கிடைக்க வழி செய்துள்ளோம்,

தமிழ்நாட்டில் மட்டும் இந்த விளையாட்டு அல்ல அனைத்து மாநிலங்களும் இந்த விலையேற்றம் உள்ளது, இதைக் குறித்து ஒன்றிய அமைச்சர் புயுஷ் கோயல் சரியான பருவமழை இல்லாததால் தான் விளைச்சல் மிக கம்மியாக உள்ளது என்று கூறினார், இதைத்தான் நாங்களும் நினைவூட்டி இருக்கிறோம், தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் அகில இந்தியாவிலும் இந்த பிரச்சனை உள்ளது,

இதுகுறித்து தோட்டக்கலை சார்ந்த  சார்ந்த அனைவர்களும் ஆலோசனை நடத்தி இருக்கிறோம், முதல் கட்டமாக வடசென்னை தென்சென்னை மத்திய சென்னை ஆகிய மூன்று பகுதிகளாக பிரித்து மத்திய சென்னையில்  32 கடைகளில் வடசென்னையில் 25 கடைகள் தென் சென்னையில் 25 கடலாக மொத்தம் 82 கடைகளில் கிடைக்க வழி வகை செய்யப்படும், நாளை முதல் 111 கடைகள் மற்றும் பண்ணை பசுமை மையங்களில் தக்காளி 60 ரூபாய் விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

இதை அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த படும், எதிர்காலத்தில் வேளாண் உற்பத்தி மையத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில் அதிக உற்பத்தி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், 75%  தமிழகத்திலேயே விவசாயம் செய்து தக்காளி தரப்படுகிறது மீதி உள்ள 25 சதவீதம் மட்டுமே வெளியிலிருந்து வர வைக்கப்படுகிறது,

விவசாயிகளுக்கு ஆதார விலையை கொடுத்து அவர்களுக்கு உறுதியளித்திருக்கிறோம், ஆண்டுதோறும் இந்த மாதங்களில் தக்காளியின் விலை கூடுதலாக படுகிறது அதேபோன்றுதான் இந்த ஆண்டும் ஜூலை மாதத்தில் தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது இதனை கட்டுப்படுத்த ஆலோசனை நடத்தி முடிவு எடுத்துள்ளோம், 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *