வடசென்னை படபாணியில் ஆசனவாயில் போதை பொருட்களை கடத்திய கைதி…!

நீதிமன்றத்தில் ஆஜர் ஆகிவிட்டு மீண்டும் சிறைக்குத் திரும்பும் போது ஆசனவாயில் போதை பொருட்களை கடத்திய கைதி கைது .  

திண்டுக்கல் மாவட்டம் பொன்மாந்துரையை  சேர்ந்த குருநாதன் என்பவரது மகன் காடு என்ற அன்பழகன் இவர் மீது திண்டுக்கல் நகர காவல் நிலையத்திலும் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திலும்  கொலை முயற்சி  , திருட்டு ,  போக்சோ  உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன 

திண்டுக்கல் மாவட்ட சிறையில் உள்ள சிறை கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் காடு என்ற அன்பழகன் விசாரணை கைதியாக ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்

இந்நிலையில் திண்டுக்கல்  மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக  திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய காவலர்கள் ஈஸ்வரன் மற்றும் கருணாகரன் தேனி மாவட்ட சிறைக்கு வந்து அன்பழகனை திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்

விசாரணைக்கு  ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் தேனி மாவட்ட சிறைக்கு அன்பழகனை போலீசார்  அழைத்து வந்தனர் சிறை நுழைவாயிலில் உள்ள சிறைக் காவலர் விக்ணேஷ் சிறைக்குள் கொண்டு செல்லப்படும் முன்பு கைதிக்கு மேற்கொள்ளப்படும் வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொண்டார்

அப்போது ஆசனவாய் பகுதி  சந்தேகத்திற்கு இடமான முறையில் இருப்பதை அறிந்து அப்பகுதியில்  மேற்கொண்ட தீவிர  சோதனையில்  ஆசன வாயில் போதையேற்றும் கூல்லிப் 48 பொட்டலங்கள் ,  மற்றும் நைட்ரோஜென்  17 மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு  அவை பறிமுதல் செய்யப்பட்டது

இதையடுத்து தேனி மாவட்ட சிறை துணை கண்காணிப்பாளர் கார்த்திக் கண்டனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் இதையடுத்து கண்டமனூர் சார்பு ஆய்வாளர் பிரேம்ஆனந்த் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை சிறைக்கு கொண்டு சென்றதிற்காக காடு என்ற அன்பழகன் கைது செய்தார்

சிறைக்குள் இருந்து நீதிமன்றத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்ற கைதி  மீண்டும் சிறைக்கு வரும்போது ஆசனவாயில் போதை பொருட்களை மறைத்து வைத்து  கொண்டுவர முயன்ற சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *