50 கோடியில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டிவிட்டு கலைஞரின் பேனா சின்னத்திற்கு கதறும் ஈபிஎஸ்…! 

இரண்டு கோடிக்கு பேனா நினைவு சின்னம் வைத்துவிட்டு, 80கோடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதும் பேனாவை கொடுங்கள், அப்பொழுது மக்கள் பாராட்டுவார்கள் புகழ்வார்கள். என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் எவையெல்லாம் மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களோ, அதை அனைத்தையும் பார்த்து பார்த்து தமிழக முதல்வர் முடக்கிக் கொண்டு வருகிறார் எனவும் விமர்சனம் செய்தார்.

சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேம்பனேரி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். இதற்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மேளதாளங்கள் முழங்க, கரகாட்டம் கலை மூலமாக ஏற்பாடு செய்து வரவேற்பளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அதிமுக ஆட்சி கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்ததாக விளம்பரம் செய்யும் விளம்பரப்பிரியராக உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் செய்த சாதனை, அவரை தந்தைக்கு பேனா நினைவுச்சின்னம், மைதானத்திற்கு பெயர் உள்ளிட்டவை தான் சாதனை எனவும் பேசினார். 

மேலும் எழுதாத பேனாவிற்கு 82 கோடி தேவையா? நினைவு மண்டபம் அல்லது கட்சி அலுவலகத்தில் இரண்டு கோடியில் பேனா வையுங்கள், நடுக்கடலில் வைத்தால் தான் வைத்த மாதிரி இருக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

இரண்டு கோடிக்கு பேனா வைத்துவிட்டு, 80கோடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதும் பேனாவை கொடுங்கள், அப்பொழுது மக்கள் பாராட்டுவார்கள் புகழ்வார்கள் மக்கள் வரிப்பணத்தை எடுத்து முதல்வரின் தந்தைக்கு நினைவு பேனாச்சின்னம் அமைக்கிறார் என்றும் விமர்சித்தார்.

அதிமுக ஆட்சி தான் மக்களுக்கு நன்மை செய்த ஆட்சி பெருமிதம் தெரிவித்தார் முதியோர் உதவித்தொகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் நிறுத்திவிட்டனர் அந்த பணத்தை வைத்து முதியவர்கள் மருந்து மாத்திரையில் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் எவையெல்லாம் மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களோ அதை அனைத்தையும் பார்த்து பார்த்து தமிழக முதல்வர் முடக்கிக் கொண்டு வருகிறார் லஞ்சம் இல்லாத துறையே தமிழகத்தில் கிடையாது, ஆனால் முதல்வரை கேட்டால் அனைத்து துறைகளும் வளர்ந்து வருகிறது என்று கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *