மாறிவரும் உணவு பழக்கத்தால் 15 வருடத்தில் 130 கோடி போருக்கு நீரழிவு நோய் வரும் அபாயம்

மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களால் உலகளவில் 2040 ஆம் ஆண்டில் 130 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கும் அபாயம் உள்ளது – வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் மருத்துவர் கணையவியல் மற்றும் நீரிழிவுதுறை நிபுணர் நிகில் தாமஸ் பேட்டி.

வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கணையவியல் மற்றும் நீரிழிவுத்துறை நிபுணர் மருத்துவர் நிகில் தாமஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில். உலகம் முழுவதும் நீரிழிவு நோயானது வேகமாக பரவி வருகிறது.

நாளுக்கு நாள் மது, புகைப்பழக்கம் உள்ளிட்டவைகளால் தவறான உணவு பழக்கவழக்கங்களாலும் நீரிழிவு நோய் சதவிகிதம் நாட்டில் அதிகரித்து கொண்டே செல்கிறது. 2040 ஆம் ஆண்டில் உலகளவில் 130-கோடிக்கும் அதிகமானோர் 2 வகையான நீரிழிவுகளால் அதிகம் பாதிக்கபடுவார்கள்.

 கடந்த சில ஆண்டுகளில் கிராமபுறங்களிலும் துரித உணவுகளையும் பாலிஷ் செய்த அரிசியையும் பயன்படுத்துகின்றனர். இதனால் அதிக அளவு நீரிழிவு ஏற்படுகிறது சிறுதானியங்கள் மற்றும் கேழ்வரகு ஆகிய உணவுகளை மக்கள் உண்ண வேண்டும் இந்தியாவில் இதுவரையில் 40 சதவிகிதம் மக்கள் தங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது என்பதை கூட அறியாமல் உள்ளனர்.

இதுகுறித்த ஆய்வுகளும் கண்காணிப்புகளை தீவிரபடுத்த வேண்டியது அவசியம் மேலும் மகப்பேறு கால நீரிழிவு நோயும் தற்போது அதிக அளவில் ஏற்படுகிறது இதனால் குழந்தைகள் எடை குறைவாக பிறப்பதுடன் குழந்தைகளுக்கும் நீரிழிவு ஏற்படுகிறது 

நகர் புறங்களிலும் அதிக அளவில் 25 சதவிகிதத்திற்கும் மேலாக நீரிழிவு நோய் உள்ளது கிராமபுறங்களில் 16 சதவிகிதம் அளவிற்கு மக்கள் பாதிக்கபடுகின்றனர். மேலும் குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது மக்கள் அதனை பயன்படுத்தகூடாது மதுவால் கல்லீரல் கணையம் பாதிக்கபடுகிறது.

இதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது மக்களுக்கு அரசு நல்ல உணவை வழங்க வேண்டுமானால் கேழ்வரகு, சிறுதானிய வகைகளை அரசே கிராம மற்றும் நகர பகுதிகளில் வழங்க முன் வரவேண்டும். சத்தாண உணவுகளை அனைத்து தரப்பு மக்களுக்கு வாங்கி உண்ணும் வகையில் விலையை அரசு கட்டுபாட்டில் வைத்தால் நீரிழிவு நோயாளிகள் உயர்ந்து வருவதை கட்டுபடுத்தலாம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *