சீமானுக்கு பகுத்தறிவு இருந்தால் பாஜகவுடன் கூட்டணிதான்… எச்.ராஜா புது ரூட்டு…!

பகுத்தறிவுடன் சிந்தித்தால் பாஜகவுடன், சீமான் நெருங்க வாய்ப்பு உள்ளது. அரசியலில் ஈடுபட நடிகர் விஜய்க்கு திரைப்பட பாப்புலாரிட்டி மட்டும் போதாது. இதற்கு கமலஹாசனே உதாரணம். சிவகங்கையில் H.ராஜா பேட்டி 

சிவகங்கை தனியார் மஹாலில் பாஜக ஆட்சியின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்க கண்காட்சியினை திறந்து வைத்த முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார். சீமான் தமிழ் தேசிய பிரிவினைவாத கொள்கையை கைவிட்டு விட்டு, பகுத்தறிவுடன் சிந்தித்தால் பாஜகவுடன், சீமான் நெருங்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தவர்,

செந்தில் பாலாஜியின் உடல்நிலை முழு சந்தேகமளிக்கும் வகையில்   இருப்பதாகவும், செல்வி ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரது படம் வெளியிடாதது ஏன் என்று கேள்வி கேட்டவர்கள் இன்று செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து படம் வெளியிடாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். மெட்ரோ ரயில் ஊழல் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில், சிபிஐ விசாரணை  கோரினால்,  ஸ்டாலினால் மூடப்பட்ட கதவுகள் தூள் தூளாகி விடும் என்றார் ,

அமைச்சர் சேகர் பாபுவின் அடாவடித்தனம் இன்னும் 3 மாதங்களில் முடிந்து விடும். அனைத்து கோயிலுக்கும் நான் சென்று இருக்கின்றேன் எல்லா கோயில்களிலும் திருட்டு நடக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, மக்களை திரட்டி 46 கோயில்களுக்குள் சென்று அறநிலைத்துறை அதிகாரிகளை  வெளியேற்றி விடுவோம் என்றார். 

மேலும், 2016 இல் இந்தியாவின் பிரதமராக மோடி வரவில்லை என்றால், பாகிஸ்தான், இலங்கையை விட இந்தியா பிச்சைக்கார நாடாக மாறி இருக்கும்.  நெல்லையில் பிஷப் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. விளக்கம் கேட்டால் மட்டும் போதாது அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அமலாக்கத்துறையால், பாதிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றதாகவும், கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள், கார்ப்பரேட் முதலாளிகளின் தனி விமானத்தில் பயணித்தனர். இவர்கள் எப்படி நேர்மையான ஆட்சியே தருவார்கள் என H.ராஜா கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *