தங்கம் விலை போல தினமும் ஏறும் தக்காளி விலை…!

tomato

தூத்துக்குடி காய்கறி சந்தையில் தக்காளி வரத்து குறைவு காரணமாக மொத்த விற்பனை கிலோ 80 ரூபாயாகவும் வெளிச்சந்தையில் சில்லறை விற்பனை தக்காளி விலை கிலோ 100 ரூபாயை தொட்டது

இதேபோன்று பீன்ஸ் 120 ரூபாய்க்கும் அவரைக்காய் 100 ரூபாய்  விலையை எட்டியதால் பொதுமக்கள் வியாபாரிகள் பாதிப்பு.

தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி தினமும் 2000 பெட்டிகள் வந்த நிலையில் தற்போது தக்காளி வரத்து குறைவு காரணமாக 600 பெட்டிகள் மட்டுமே வருகின்றன. இதன்காரணமாக தூத்துக்குடி காமராஜர் மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் தக்காளி விலை கிலோ 80 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது ஆனால் வெளிச்சந்தையில் சில்லறை விற்பனையாக தக்காளி விலை கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளது.

இதேபோன்று வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் கிலோ 80 முதல் 90 ரூபாய் வரையும் பீன்ஸ் 120 ரூபாய்  வரையும் அவரைக்காய் 100 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

 இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் வட மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக அங்கும் தேவை அதிகரிப்பின் காரணமாக தக்காளி விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *