செந்தில் பாலாஜி நார்மல் வார்டுக்கு மாற்றப்பாட்டார்.. அமைச்சர் மா.சு தகவல்…!

அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கை பின் சாதாரன அறைக்கு மாற்றப்பட்டு தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

கோவையில் பொதுமக்ககள் 8 கிலோ மீட்டர் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடத்தை தேர்வு செய்யும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாலாங்குளம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது :  

பொதுமக்கள் உடல்நலத்தை சீராக வைக்க நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் அதனை ஊக்குவிக்கும் வகையில் இன்று நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பகுதிகளில் இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு இடத்தில் நடை பயிற்சி மேற்கொள்வோர் அசதி ஏற்படும் போது உட்காருவதற்கு வசதியாக இருக்கைகள் அமைத்து கொடுக்க வேண்டும்.  அதே போல் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்ட அளவிளான சுகாதார அலுவலர்கள் பொதுமக்களை ஒருங்கிணைத்து நடை பயிற்சி மேற்கொள்வோருக்கு தேவையான உதவிகளை செய்வது,  

அதேபோல் அவர்களுக்கு நீரிழிநோய், ரத்த அழுத்த நோய் போன்ற இந்த பரிசோதனைகளை மேற்கொள்வது, போன்ற பணிகளை மேற்கொள்வது என்று முடிவெடுத்து இருக்கிறோம். அந்த வகையில் ஏற்கனவே நானும் நம்முடைய துறையின் செயலாளர்களும் ஜப்பான் டோக்கியோவுக்கு சென்றிருந்தபோது எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கான “ஹெல்த்வாக் ரோடு” ஒன்று டோக்கியோவில் அமைக்கப்பட்டு பெரிய அளவில் பயன்பாட்டில் இருக்கிறது. 8 கிலோமீட்டர் நடந்தால், ஒரு 10,000 அடிகளை எடுத்து வைக்க முடியும் என்பது ஆகும். 

ஒவ்வொரு மனிதனும் தினந்தோறும் பத்தாயிரம் அடிகள் நடந்தால் அவருடைய அந்த உடல்நிலை மிக சீராக இருக்கும், ரத்த ஓட்டம் மிகச் சீராக இருக்கும். பெரிய அளவிலான நோய் பாதிப்புகள் இருக்காது, எனவே வருமுன் காப்போம் என்கின்ற வகையில் தமிழக மக்களை நடப்பதற்கு பயிற்சிவிக்கும் விதமாகவும்,  அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வசதியாக நடை பாதைகள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் நல்வாழ்வு துறையும், அந்தந்த மாநகர உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து இந்த பணியினை மேற்கொள்வார்கள். 

மற்ற நாட்களில் பொதுமக்கள் தாங்களாகவே நடப்பதற்குரிய அந்த விழிப்புணர்வை பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைக்கு கோவையில் நம்முடைய துறைசார் அதிகாரிகள், கோவை மாநகராட்சி ஆணையர், மக்கள் பிரதிநிதிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு எட்டு கிலோமீட்டர் சென்று, இந்த பாதையை தேர்வு செய்து அதற்கான பணிகளை இறுதி செய்து உள்ளோம். கடந்த வாரம் மதுரையில் 8 கிலோ நடைபயிற்சி இடம் ஆய்வு செய்தோம். 

மாநிலம் முழுவதும் துறைசார் அதிகாரிகள் நடைபாதை தேர்வு செய்து வருகிறார்கள். மிக விரைவில் தமிழக முதல்வர் 38 மாவட்டங்களிலும் இருக்கிற இந்த நடைபாதை வசதிகளை பொது மக்களுக்கு அர்ப்பணிக்கிற வகையில் மிக விரைவில் ஒரு நிகழ்ச்சியின் மூலம் அது தொடங்கி வைக்க இருக்கிறார். அந்த வகையில் கோவையில் இன்றைக்கு 8 கிலோமீட்டர் தூரம் இந்த நடைபாதை தேர்வு செய்யும் பணி நிறைவுற்றிருக்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது சாதாரன அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *