ஆந்திர முதல்வரின் அரசியல் பயணம் ராம்கோபால் இயக்கத்தில் ​’வியூகம்’ டீசர் வெளியானது…!

தெலுங்கு திரை உலகில் சர்ச்சைக்குண்டான படத்தை இயக்குபவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. த தற்போது இவர் வியூகம்  ஆகிய படத்தை எடுத்து வருகிறார்.   கடந்த சில ஆண்டுகளாக அரசியல் பின்னணியில் படங்களைத் தயாரித்து வரும் ராம்கோபால் வர்மா தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் வாழ்க்கையை மையமாக வைத்து வியூகம்  படத்தை  தயாரிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வரும் ஜெகன் மோகன் தந்தையுமான ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க ஹெலிகாப்டரில் செந்து விபத்திற்குள்ளானதில் தொடங்கி 

ஜெகம் மோகன் அரசியல் நுழைவு, பாத யாத்திரை, ஆட்சியை கைப்பற்றி முதல்வர் பதவி ஏற்றது வரை  வரலாற்றை மையமாக வைத்து இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கும் வியூகம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  இப்படத்தில் ஜெகன் மோகன் வேடத்தில் அஜ்மலும், அவரது மனைவி பாரதியாக மானசா ராதாகிருஷ்ணனும் நடித்துள்ளனர். 2009 முதல் 2014 வரை என்ன நடந்தது?  ஆந்திர அரசியலில் என்னென்ன வளர்ச்சிகள் நடந்துள்ளன? என்ற வியூகம் படமும், சபதம் படத்தில் ஜெகன் முதல்வர் ஆன பிறகு  நடந்தவற்றை வைத்து படக்க  எடுக்கவுள்ளார். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வர் ஜெகன் மோகனை நேரில் சந்தித்து சுமார் 1 மணி நேரம் பேசிய ராம்கோபால் வர்மா தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் வியூகம் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்று 2019 தேர்தலுக்கு முன்பு  லட்சுமிஸ் என்.டி.ஆர். என்ற படத்தை வெளியிட்ட ராம் கோபால் வர்மா முன்னாள் முதல்வர் தெலுங்கு தேச கட்சி நிறுவனர் என்.டி.ராமாராவ் இறுதி அரசியல் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *