சரக்கடிச்சா ஆம்புலன்சுன்னு கூடவா அடையாளம் தெரியாது… என்ன கொடும சரவணா மொமெண்ட்…!

மது போதையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை திருடி விபத்து ஏற்படுத்திய வழக்கு  உரிய  விசாரணை நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

இராமநாதபுரம் புது மடத்தை சேர்ந்த  முகமது பயாஸ்கான் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் ” எங்கள் ஊரில்  பொது மக்களின் அவசர மருத்துவ தேவைக்கு  தமுமுக அறக்கட்டளை சார்பாக ஆம்புலன்ஸ் சேவை செய்ய பட்டுள்ளது  இரவு நேரங்களில்  ஆம்புலனஸை எங்களது தமுமுக புதுமடம்  கிளையில் நிறுத்தி வைக்கப்படும்.

இதனை பயன்படுத்தி அன்சர் அலி என்பவர் 8.9.2022 அன்று இரவு மது போதையில் வந்து வாகனத்தை திருடி சென்று விட்டார் இது தொடர்பாக உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் மேலும்  வாகனத்தை திருடி சென்ற அன்சார் அலி போதையில் ஒருவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டார் வாகனத்தை திருடி சென்று விபத்து ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் பலமுறை தொடர்ச்சியாக புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே இந்த வழக்கின் விசாரணையை வேறு காவல் நிலையத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார் இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது அரசு தரப்பில் வாகனத்தை திருடி சென்று விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படும் அன்சர் அலி மீது கேணிக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மனு தார்ர் புகார் குறித்து  15 நாட்களுக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க  வேண்டும்  மேலும் மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறை நடுவன் நீதிமன்றத்தை  அணுகி ஆம்புலன்சை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கினை முடித்துவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *