பாராக மாறி வரும் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம்… நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை..!

ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் ஸ்மார்ட் பாராக மாறி வரும் அவலம், பேருந்து நிலையத்தை விரைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை.

தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் கடந்த 2018 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு 2019 ஜூன் முதல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 53 கோடியே 4 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் இந்த பணி தரம் இல்லாத பொருட்களை பயன்படுத்தி தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில்  நான்கு தலங்களாக கட்டப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி பஸ் ஸ்டாண்ட் முதல் தளம் உள்ளிட்ட பல்வேறு தலங்கள் இரவு நேரங்களில் குடிமகன்கள் மற்றும் சமூக விரோதிகளின் ஸ்மார்ட் பாராக மாறி மேல் தளங்கள் முழுவதும் காலி மது பாட்டில்களால் சூழப்பட்டுள்ளது.

எனவே மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பேருந்து நிலையத்தை பொதுமக்களின் வசதிக்காக உடனடியாக திறக்க வேண்டும் இதில் கண்காணிப்பு அமைத்து பல்வேறு குற்ற செயல்கள் நடைபெறுவதற்கு முன்பு இதை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *