ஜூன் 12 முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் ஆரம்பம்…. ரசிகர்களுக்கு அடுத்த கொண்டாட்டம்…!

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் ஏழாவது சீசன் ஜூன் 12-ம் தேதி தொடங்கி ஜூலை 12 ந் தேதி நடப்பதாகவும் சேலத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பத்து நாட்கள் போட்டி நடைபெற உள்ளதாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மாநில உதவி செயலாளர் ஆர்.என்.பாபா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். தமிழ்நாடு கிரிக்கெட்  சங்கத்தின் மாநில உதவி செயலாளர் ஆர்.என். பாபா செய்தியாளர்களிடம் கூறும் போது,  தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை கண்டறியும் விதமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் கடந்த 2016 முதல் தமிழ்நாடு பிரிமியர் லீக்   தொடர் நடத்தப்பட்டு வருகிறது.  இதுவரை 6 சீசன்களை நடத்திய நிலையில் தற்போது ஏழாவது சீசனை வரும் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது . 

இந்த போட்டி ஜூலை 12 வரை நடைபெற உள்ளது. இதில் வழக்கம் போல எட்டு அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணிகளும் வீரர்களை  ஏலத்தின் அடிப்படையில் தேர்வு செய்துள்ளனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் வீரர்களை ஏலத்தின் அடிப்படையில் எடுத்ததில்லை முதன்முறையாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. 

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸிற்காக  விளையாடி  வரும் தமிழக வீரரான சாய் சுதர்சன் ,  21.6 லட்சத்திற்கு  டி.என்.பி.எல் -ன்    லைகா கோவை கிங்ஸ் அணியால்  வாங்கப்பட்டுள்ளார். குறிப்பாக ஐபிஎல் ஏலத்தை விட டிஎன்பிஎல்  ஏலத்தில் சாய் சுதர்சன் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளார். 

இந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் ஏழாவது சீசனில் இறுதிப் போட்டி உட்பட மொத்த 32 போட்டிகள் 25 நாட்களில் நடைபெறுகிறது இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் கோவை திண்டுக்கல் சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடத்தப்பட உள்ளது சேலம் கிரிக கெட் மைதானத்தில்  பத்து நாட்கள்,  பத்து  போட்டிகள் நடைபெறுகிறது  என்றார். 

தொடர்ந்து பாபா  கூறும் போது ,  இப் போட்டியில் முதல் பரிசு 50 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசு 30 லட்சம் ரூபாயும், மூன்று மற்றும் நான்காம் பரிசு 20 லட்ச ரூபாயும் , ஐந்து , ஆறு,  ஏழு , எட்டாம் பரிசுகள் தலா 12.5 லட்சம் என மொத்தம்  ஒரு கோடியே  எழுபது  லட்ச ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. டிக்கெட் விலை ரூ. 200 ரூபாய் , மற்றும்  உணவுடன் 1500 ரூபாய் என ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது என்றும்  இப் போட்டியில் சாய் சுதர்சன் ,  சோனியாதவ் , சஞ்சய் யாதவ் ,  சேலம் நடராஜன் , இந்திரஜித் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கிறார்கள் என்றார். 

தொடர்ந்து ஆரன் பாபா குருவையில் அடுத்த ஆண்டு முதல் மகளிர் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டி நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். டிஎன்பிஎல் 2023 சீசனுக்காக  டி ஆர் எஸ் முறை பயன்படுத்தப்பட உள்ளதாகவும், இம்பாக்ட் வீரர்  விதி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பாபா, கிராமப்புற கிரிக்கெட்  வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்வமுள்ளவர்களை தேர்வு செய்து இரண்டு மாதங்கள் பயிற்சி அளிக்கிறது. 

அதில் சிறப்பாகவும் விளையாடக் கூடியவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளித்து வருவதாகவும், இதில் சிறப்பாக விளையாடுபவர்கள் தமிழ்நாடு அணியிலும், இந்திய  அணிலும் இடம்பெறுகின்றனர் என்றார். பேட்டியின் போது தமிழ்நாடு கிரிக்கெட் சிங்கத்தின் முன்னாள் செயலாளராக ராமசாமி சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் எல்.ஆர்.என்.பாபு உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *