மல்யுத்த வீரர் வீராங்கனைகளுடன் விளையாட்டு துறை அமைச்சர் இன்று பேச்சு வார்த்தை…!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிட்ஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி போராடிவரும் மல்யுத்த வீரர் வீராங்கனைகளுடன் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் இன்று பேச்சு வார்த்தை நடத்தினார்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒலிம்பிக் மல்யுத்த போட்டி உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இவர்களுடன் சில தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார் ஆனால் அதில் என்ன விஷயங்கள் பேசப்பட்டது என்பது சம்பந்தமான வெளிப்படையான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர் வீராங்கனைகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அமைச்சரின் வீட்டிற்கு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக போராட்டத்தை முன்னெடுத்து வரும் பஜ்ரங் புனியா மற்றும் சாக்சி மாலிக் ஆகியோர் வந்திருந்தனர் முன்னதாக இவர்கள் தங்களது அரசு பணிகளை மீண்டும் தொடங்கியிருந்த நிலையில் போராட்டம் கைவிடப்படுகிறதா என கேள்வி எழுந்த பொழுது தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் ஓயாது என விளக்கம் அளித்து இருந்தார்கள்.

இதற்கிடையில் இவர்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதற்காக இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் இந்திய விளையாட்டு துறையில் ஏற்பட்டுள்ள இத்தகைய பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் பாலியல் குற்றச்சாட்டு எழும்பொழுது அவற்றை விசாரிப்பதற்கான முறையான அமைப்புகளை உருவாக்க வேண்டும் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை மல்யுத்த வீரர் வீராங்கனைகள் முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *