பட்டியல் இன மக்களுக்கு அனுமதி மறுப்பு…  திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல்…!

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை சொந்தமான திரௌபதி அம்மன் ஆலயத்தில் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி பட்டியல் இனத்தவர்கள் வழிபட சென்ற போது தடுத்து நிறுத்தி அவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறி வந்தனர். எனை தொடர்ந்து இரு சமூக பிரச்சினை ஆக ஏற்பட்டதை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வந்தது. 

கடந்த 2 மாதங்களாக பட்டியல் இனத்தவர் கோவில் அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் பழனி தலைமையில் இரண்டு முறையும், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் ஐந்து முறையும் சமாதான கூட்டம் நடத்தியும் பட்டியல் சமூக மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று தொடர்ந்து மாற்று சமூகத் தரப்பினர் அடம்பிடித்து வந்த நிலையில் இன்று காலை விழுப்புரம் வருவாய் கோட்டாச்சியர்  ரவிச்சந்திரன் கோவிலை சீல் வைத்தார்

இதன் காரணமாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் ஐந்து மாவட்ட போலீசார் 2000க்கும் மேற்பட்டோர் மேல்பாதி கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *