புதுச்சேரியில் இருந்து மது பாட்டில் கடத்திய இரு பெண்கள் கைது…

ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல நாங்கள்; கடலூரில் டிராவல் பேக்கில் மது பாட்டில் கடத்திய சகோதரிகள் கைது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடைபெற்ற விஷ சாராய சாவு எதிரொலியாக கடலூர் மாவட்டத்திற்கு புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்துவதை போலீசார் தீவிரமாக கண்காணித்து தடுத்து வருகின்றனர் தொடர்ந்து 8 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் தனியார் வாகனங்கள் அரசு வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது 

இதனால் புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு மது பாட்டில்கள் கடத்தப்படுவது பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சோதனையில் ஏராளமானோர் மது பாட்டில் கடத்தி வந்து வழக்கில் கைது செய்யப்பட்டனர் ஆனால் பெண்கள் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவதில்லை என்பதால் போலீசார் பெண்கள் வரும் வாகனங்களில் அதிக அளவில் சோதனைக்கு உட்படுத்துவதில்லை அதே போன்று அரசு பேருந்துகள் உள்ளிட்ட உள்ளிட்டவற்றில் பயணிக்கும் பெண்களை சோதனை செய்வது கிடையாது 

இதனை பயன்படுத்தி புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலூர் வழியாக பஸ்சில் மதுபாட்டில் மற்றும் சாராயம் கடத்தப்படுவதாக கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீப்ரியா தலைமையிலான போலீசார் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்ஸை மறித்து சோதனை செய்தனர். 

அப்போது பஸ்ஸில் இரண்டு பெண்கள் வைத்திருந்த டிராவல் பேக்கை சோதனை செய்தபோது, அதில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் இருவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் சமத்துவபுரத்தை சேர்ந்த அமுதா (வயது 50), மற்றும் பூமாதேவி (45) என்பதும், இருவரும் அக்காள் தங்கை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதா, பூமாதேவி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள 108 மது பாட்டில்கள் மற்றும் 30 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *