காற்று மாசடைவதாக கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலையை அப்புறப்படுத்திய விவசாயிகள்

farmer protest

நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசடைவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்ததை தொடர்ந்து அதிரடியாக கொட்டாங்குச்சிகளிலிருந்து கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலையை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா ஆலம்பாடி கிராமம் மற்றும் ரெட்டியார்சத்திரம் அருகே காமாட்சிபுரம் கிராம பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசு அடையும் அரசால் தடை செய்யப்பட்ட கொட்டாங்குச்சிகளை எரித்து அதன் மூலம் எடுக்கப்படும் கார்பன் தொழிற்சாலைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியதின் பேரில் குஜிலியம்பாறை வட்டாட்சியர் ரமேஷ் அவர்களின் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆலம்பாடி கிராமம் கிருஷ்ணரெட்டியார் மகன் ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான நிலப்பகுதி பார்வையிட்டனர்.

அப்போது ஆலம்பாடியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் எட்டு தொழிலாளர்களைக் கொண்டு அரசால் தடை செய்யப்பட்ட கொட்டாங்குச்சியின் மூலம் கார்பன் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததை கண்டறிந்தை தொடர்ந்து உடனடியாக தடுத்து நிறுத்தினர். மேலும் கொட்டாங்குச்சி தீ மூட்டப்பட்ட இரண்டு குயில்களையும் ஜேசிபி இயந்திரம் மூலம் அளிக்கப்பட்டது.

 இதைத்தொடர்ந்து ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரத்தில் கடந்த ஆறு மாதமாக இயங்கி வரும் அரசால் தடை செய்யப்பட்ட கொட்டாங்குச்சி உற்பத்தி செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. குஜிலியம்பாறை பகுதியில் அப்புறப்படுத்தியது போல் உடனடியாக தங்கள் பகுதியில் அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *