மேகதாதுவில் அணை கட்டினால் நாடாளுமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும் டெல்டா விவசாயிகள் எச்சரிக்கை

நீர்தேக்கம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, இதன் அடிப்படையில் காவிரியின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடகா அரசு அணைக்கட்ட ஒன்றிய அரசு அனுமதிக்க கூடாது. அவ்வாறு அனுமதித்தால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும் என காவிரி டெல்டா விவசாயிகள் ஒன்றிய மற்றும் கர்நாடகா அரசுகளுக்கு கண்டனம்.

கர்நாடகாவில், காவிரியின் குறுக்கே மேகதாட்டு என்ற இடத்தில் அணைகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் சமீபத்தில் தெரிவித்திருந்தார் . இது காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு இதன் அடிப்படையில் கர்நாடகா அரசு, காவிரியின் குறுக்கே எந்த அணையையும் கட்டக்கூடாது என தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில், மேகதாட்டு என்ற இடத்தில் கர்நாடக அரசு அணைக்கட்ட மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என சமீபத்தில் கர்நாடக நீர் பாசன துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு , காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு இதன் அடிப்படையில் காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் இது தொடர்பாக காவிரி டெல்டா பாசன  விவசாயிகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகள் மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகள் இணைந்து மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஒன்றிய அரசு மேகதாது அணைக்கட்ட அனுமதிக்க கூடாது என்றும் தமிழக விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி ஒன்றிய அரசு அனுமதித்தால், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும் என காவேரி டெல்டா விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் 9 ஆறுகள் மூலம் வீணாக ஆண்டுக்கு 2200 டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கிறது. அதனை சீரமைக்க திட்டங்கள் தீட்டினால் கர்நாடகா மாநில முழுமைக்கும் தேவையான குடிநீர் மட்டுமல்லாமல், பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்றும் காவிரி டெல்ட்டா விவசாயிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *