பிச்சைக்காரர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கிற்கு மத்தியில் சென்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள பிச்சைக்காரன் இரண்டு திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருப்பதியில் உள்ள சி எஸ் சினிமா திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள பிச்சைக்காரன் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் திடீரென நடிகர் விஜய் ஆண்டனி திரை முன்பு நேரில் தோன்றினார்.
இதனால் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் அடைந்தனர். இதனை அடுத்து திருப்பதி அலிபிரியில் ( யாசகம் ) பிச்சை எடுத்து கொண்டுருந்தர்களுக்கு செருப்பு, கண்ணாடி, விசிறி, ஆடைகள் உணவு உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பை வழங்கினார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படம் மிக வெற்றிகரமாக திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் திரையிடப்பட்டு வருகிறது.
பிச்சைக்காரன் மூன்றாம் பாகம் 2025 ஆம் ஆண்டு வெளியிடும் விதமாக தயாரிக்கப்படும். இதற்கான கதை எழுதி வருகிறேன். பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ஐம்பதாவது நாள் வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது மீண்டும் சந்திப்போம் என அவர் தெரிவித்தார்