வாசனை திரவிய பொருட்களில் ஆஸ்கர் யானை… உதகையில் வைரல்…!

14 வகையைச் சேர்ந்த 95 கிலோ வாசனை திரவிய பொருட்களை வைத்து உருவாக்கப்பட்ட ஆஸ்கர் படத்தில் நடித்த யானைகள் மாதிரி உருவங்கள். வடிவமைக்கப்பட்டுள்ளன மூன்று நாட்கள் வாசனை திரவிய கண்காட்சி நடைபெற உள்ளது இன்று காலை 11:30 மணியளவில் கண்காட்சியை திறந்து வைக்கிறார் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர்

நீலகிரி மாவட்டம்  கூடலூரில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பத்தாவது வாசனை திரவிய கண்காட்சி நடக்க உள்ளது. இன்று காலை 11:30 மணியளவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்பரித் துவங்கி வைக்கின்றனர்.

 இந்த நிலையில் சுமார் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன அதில் இங்கு விளையக்கூடிய பல்வேறு வாசனை திரவிய வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கூடலூர் பகுதி என்பது வாசனை திரவிய பொருட்கள் விளையக்கூடிய  பகுதியாக உள்ளதால் இந்த கண்காட்சி நடைபெற்ற வருகிறது.

இந்த நிலையில் இந்த வருடம் தோட்டக்கலைத்துறை சார்பாக கூடலூரில் விளையக்கூடிய லவங்கம் கசகசா, மிளகு, சாசீரகம், கருஞ்சீரகம், மிளகாய் விதை சோம்பு, பட்டை. கிராம்பு ஏலம் போன்ற 14 வகை  95 கிலோ வாசனை திரவிய பொருட்களை வைத்து இந்த வருடம் முதுமலையில் எடுக்கப்பட்டு சிறந்த ஆவணப்படமாக விருது பெற்ற  the elephant Whisperers படத்தில் நடித்த ஆஸ்கர்  படத்தில் இடம்பெற்ற ரகு.  பொம்மி  யானைகளை வைத்து  தத்ரூபமாக உருவாக்கியுள்ளனர்.

மேலும் தனியார் பள்ளியில் நடக்க இருக்கும் வாசனை திரவிய கண்காட்சிக்காக பொழுதுபோக்கு விளையாட்டு மைதானங்கள் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடிய மேடைகள் போன்றவற்றை வருவாய்த்துறையினர் அமைத்துள்ளனர்.   

இங்கு உள்ள பொதுமக்கள் மட்டுமின்றி  சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்பதால். வருவாய்துறை சார்பாக பெரியவர்களுக்கு பத்து ரூபாயும் குழந்தைகளுக்கு ஐந்து ரூபாய் நுழைவு  கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *