கோடை வெப்பத்தைபோல மடமடவென எகிறும் தங்கத்தின் விலை…!

“நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 91 அதிகரித்திருந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை கூடுதலாக ரூ. 44 அதிகரித்துள்ளதால் நகை பிரியர்கள் மேலும் அதிருப்தி” 

கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இரக்கத்தை கண்ட நிலையில் தற்போது மட மட வென தங்கத்தின் விலை உயர்ந்தந்துள்ளது. நேற்றைய தினம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.91 அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்தந்துள்ளது. 

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 அதிகரித்து 5,750 ரூபாய் க்கும் சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.46,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.80 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.82,800 க்கும் விற்பனை செய்ய படுகிறது. 

மேலும் 24காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,273 க்கும் சவரனுக்கு ரூ.50,184 க்கும் விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.49 மற்றும் சவரனுக்கு ரூ.392 அதிகரித்துள்ளது.

இனிவரும் காலங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்திருந்த நிலையில் இன்றைய தங்க விலை உயர்வு பொதுமக்களிடயே அதிருப்தியை கூட்டியுள்ளதாக போதுமாக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *