‘உங்கள் அண்ணனாக நான்’ மிஸ் கூவாகம் விழாவை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் முக்கிய திருவிழா தாலி கட்டு நிகழ்வு நாளை மாலை கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் அரவானை கணவனாக நினைத்து திருநங்கைகள் தாலி கட்டு நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் இன்று காலை உளுந்தூர்பேட்டையில் மிஸ் கூவாகம் 2023 கான அழகிய போட்டி முதல் சுற்றில் 45 திருநங்கைகள் பங்கேற்று அதில் 16 பேர் இரண்டாம் சுற்றுக்கு தேர்வான நிகழ்ச்சி  நடைபெற்றது

அதனை தொடர்ந்து இன்று மாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் மிஸ் கூவாகம் 2023 அழகி போட்டி  பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு விழாவினை இன்று மாலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று தொடங்கி வைத்தார் விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த மிஸ் கூவாகம் விழாவில் உங்களோடு பங்கேற்பதில் மகிழ்ச்சி. உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உங்களுக்கு அண்ணனாக இந்நிகழ்வில் பங்கேற்கிறேன். மிஸ் கூவாகம் நிகழ்ச்சி வெறும் பொழுதுபோக்கு மட்டுமில்லாமல், இந்தியா முழுவதும் வருகின்ற திருநங்கைகளின் திறமையை வெளிப்படுத்தும் சிறந்த மேடையாக அமைந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த கூவாகம் விழாக்களில், இப்படி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றதில்லை. திமுக எப்போதும் திருநங்கையர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய இயக்கமாகும். தலைவர் கருணாநிதி, திருநங்ககைளுக்கு ஏராளமான நலப்பணிகளை செய்துள்ளார். திருநங்கையர்கள் என கண்ணியமான முறையில் அழைக்கவும் செய்தவர், கல்வி, வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்களில் ஆண், பெண் என்று இருந்ததை மூன்றாம் பாலினம் என்ற வாய்ப்பையும் வழங்கியர். கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, திருநங்கையர் நல வாரியம் அமைக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் நலவாரி முற்றிலும் முடக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், மீண்டும் நல வாரியத்தை புதுப்பித்துள்ளார்.

நமது முதல்வரும், கடந்த இரண்டு ஆண்டில் பல நல்ல திட்டங்களை வழங்கி உள்ளார். இந்த ஆட்சி அமைந்த உடனே திருநங்கைகளுக்கு இலவச பஸ் வசதி, நல வாரியம் புதுப்பிக்கப்பட்டது. நான் எம்எல்ஏவாக பொறுப்பேற்றவுடன் திருநங்கைகளுக்கான நலத்திட்ட உதவிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றினேன். திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு முகாமை நடத்தினோம். அறக்கட்டளை மூலம் பல்வேறு நல உதவிகளும் வழங்கி உள்ளோம். கொரோனா காலத்திலும் திருநங்கைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. 

நான் எம்எல்ஏ பொறுப்பு ஏற்றதும், சட்டசபையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் குறித்தது. திருநங்கைகளுக்கு அரசு சார்பில் மகளிர் குழுவில் வாய்ப்பு, ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டது, எனது விளையாட்டுத் துறையிலும், திருநங்கைகளுக்கான தனியாக போட்டிகள் நடத்துவது தொடர்பாகவும் விரைவில் பரிசிலித்து முடிவெடுக்கப்படும். திருநங்கைகள் குறைகள் கேட்பதற்கு எனது அலுவலகம் 24 மணி நேரம் திறந்து இருக்கும். இந்தியாவிலேயே, நர்த்தகி திட்டக்குழு உறுப்பினர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து கவுன்சிலர்களை திமுக உருவாக்கியுள்ளது. திருநங்கைகள் குறைதீர் கூட்டம், அரசு பணி வாய்ப்பு, சமத்துவபுரங்களில் இட ஒதுக்கீடு, பல்கலைக்கழகங்களில் ஒரு சேர்க்கை இடம் உள்ளிட்ட பல சலுகைகளை திமுக அரசு கொடுத்துள்ளது என்றார்.

அமைச்சர் உதயநிதி பேசிவிட்டு விழாவில் முடித்துக் கொண்டு புறப்பட்டார். அதனை தொடர்ந்து விழாவானது நடைபெற்று நடன போட்டி தொடங்கிய உடனே திடீரென பலத்த மழை பெய்தால் போட்டி தடைப்பட்டது. அமைச்சர்கள் மற்றும் அனைவரும் கலைந்து சென்றனர். இதனிடையே மிஸ் கூவாகம் அழகி போட்டி தேர்வுக்கான இரண்டாவது சுற்று மற்றும் இறுதி சுற்று நாளை காலை 9:30 மணி அளவில் விழுப்புரம்  கலைஞர் அறிவாலயத்தில்  நடைபெறும் என திருநங்கைகள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *