ஓட ஓட விரட்டும் காட்டு யானை… உயிர்தப்பிய இளைஞர்களின் வைரல் வீடியோ 

கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை விரட்டிய காட்சி உயிர்தப்பிய இருசக்கர வாகன ஓட்டுநர்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

நீலகிரி மாவட்டம்  கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆனது முதுமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வனப்பகுதி ஆகும் இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், மான்கள், கரடி, புலி சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது.

தற்பொழுது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் இந்த சாலையில் அடிக்கடி காட்டு யானைகளின்  நடமாட்டம் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு இவ்வழியாக கேரளா சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது பேம் ஃபக்ஸ்என்னும் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் வந்த காட்டு யானை ஒன்று திடீரென அவர்களை விரட்ட முற்பட்டது அப்பொழுது அந்த வழியாக வந்த லாரி ஒன்றில் இருவரும் ஏற முயன்ற போது காட்டு யானை அவர்களை தாக்க முயன்றது.

இருவரும் அதிர்ஷ்டவசமாக உயர்த்தப் பின்னர் பின்னால் வந்த வாகன ஓட்டுனர் ஒருவர் இந்த வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துட்டுள்ளார் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இதனை அடுத்து காட்டு யானைகளின்  நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் வனத்துறையினர் வாகனம் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை எச்சரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *