மதுரையில் ரேபிட்டோ பைக் இயங்க தடை, ஆட்சியர் உத்தரவு…!

மதுரை காவல் ஆணையர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரை மாநகரத்தில் “ Rapido Bike Taxi ” என்ற கர்நாடகா மாநிலத்தை தலைமையகமாக கொண்ட ஒரு தனியார் நிறுவனம் மதுரையில் வாடகை கார்கள் இயங்குவது போல் Online Mobile App வழியாக பொதுமக்களிடம் www.rapido.bike என்ற Website மூலம் பொதுமக்களை தொடர்புகொண்டு மோட்டார் வாகன சட்டங்கள் / விதிமுறைகளின்படி முறையான அங்கீகாரம் பெறாமல் சுமார் 2000 – த்திற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகன உரிமையாளர்களை உறுப்பினர்கள் ஆக்கி மதுரை மாநகரில் அனுமதியற்ற வகையில் Bike Taxi -கள் இயக்கி வருவது தெரிந்து சுமார் 40 – ற்கும் மேற்பட்ட இருசக்கர வாகன உரிமையாளர்கள் மீது மதுரை மாநகர வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் கடந்த வாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டு , இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன .

மேலூம்  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு . நரேந்திரன் நாயர்  மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் . திரு.அனீஸ்சேகர்  ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களின் அறிவுறைப்படி சட்டப்படி அங்கீகாரம் பெறாத ” Rapido Bike Taxi ” நிறுவனத்திடம் Mobile App வழியாக தொடர்புகொண்டு வாடகைக்கு இரண்டு சக்கர வாகனங்களை இயக்கும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது . 

” Rapido Bike Taxi ” வாகனத்தை பறிமுதல் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது , இந்த நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் பொதுமக்கள் , இந்த நிறுவனத்தின் மூலம் தங்களது இரண்டு சக்கர வாகனங்களை வாடகை Bike Taxi- க்கு பயண்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *