சட்டசபையில் ஆளுநர் ரவிக்கு எதிரான தனித்தீர்மானம் வெற்றி!அதிரடியில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்..

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. சட்டசபையில் இன்று காலை தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின். சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்புடையதாக இல்லை, என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார்.தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி – முதல்வர் ஸ்டாலின் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. ஆளுநர் ஆர். என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக முன்பே குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் பேசிய உரைக்கு எதிராகவும் தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக எம்பிக்கள் குடியரசுத் தலைவர் முர்முவிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதோடு சட்டசபையிலேயே அவரின் உரைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி, அரசின் உரை அவை குறிப்பில் சேர்க்கப்பட்டது. இன்னொரு பக்கம் ஆளுநரின் செயல்பாடுகள் மீது ஆளும் திமுக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவி 20 மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு உள்ளார். முக்கியமாக பல்கலைக்கழகங்களில் முதல்வரை வேந்தராக நியமிக்கும் மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளார். சில மசோதாக்கள் 1 வருடமாக கிடப்பில் இருக்கின்றன. இதனால் ஆளுநருக்கும் – ஆளும் தரப்பிற்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.இதுபோக மத ரீதியாக ஆளுநர் ரவி தொடர்ந்து பேசி வருகிறார். மத ரீதியாக கடுமையான கருத்துக்களை அவர் பேசி வருகிறார். ஆளுநர் என்பவர் நடுநிலையாக செயல்பட வேண்டும். அரசியலமைப்பு ரீதியாக அதை பின்பற்றி செயல்பட வேண்டும். அப்படி இருக்கும் போது அவர் சனாதனம் பற்றி பேச கூடாது. அதேபோல் இந்தியா இந்து நாடு என்று பேச கூடாது. மதம் பற்றி அவர் கருத்து தெரிவிக்கவே கூடாது. பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளர் போல அவர் செயல்பட கூடாது என்பதுதான் திமுகவினர் ஆளுநருக்கு எதிராக வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.

இந்த நிலையில் சமீபத்தில் குடிமைப்பணி பயிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்து அதை நிறைவேற்றினார். சட்டசபையில் இன்று காலை தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின். சட்டசபை மாண்புகளை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார் . சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவோடு இந்த தீர்மானம் வெற்றிபெற்றது. 144 உறுப்பினர்களிடம் ஆதரவோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *