தவறான அறுவை சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம்…!

சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தையை பிரசிவித்த தாய், குழந்தையை பார்ப்பதற்கு முன்பாகவே உயிரிழந்த சோகம். தவறான அறுவை சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் படுத்து உருண்டு கதறல்.

தாய் இல்லாமல் குழந்தை  அழுவதாக உறவினர்கள் குழந்தையுடன் கதறியது பார்ப்பவர்கள் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது. சேலம் மாவட்டம்  ஓமலூர் அருகே உள்ள முத்தநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி  பிரகாஷ் .  இவரது மனைவி இந்துமதி(30).  இருவருக்கும்  திருமணமாகி மூன்று  ஆண்டுகள் ஆன நிலையில் கர்ப்பம் அடைந்த  இந்துமதிக்கு கடந்த  இரு  தினங்களுக்கு முன்பு பிரசவ வலி எடுத்து ,   ஓமலூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.  

இந்நிலையில் நேற்று அறுவை சிகிச்சை மூலமாக ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இந்த நிலையில் இந்துமதிக்கு உடல்நிலை மோசமானதால் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனைக்கு இந்துமதி வந்த நிலையில் அவரை  பரிசோதனை செய்த மருத்துவர்கள்,  ஏற்கனவே இந்துமதி  உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததால், அதிர்ச்சியடைந்த  உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் படுத்து உருண்டு கதறி அழுதனர். 

மேலும் பிறந்த ஆண் சிசுவை கையில் வைத்துக்கொண்டு,   தாய் இல்லாமல் குழந்தை கதறி அழுவதாக உறவினர்கள்  கதறியது ,  பார்ப்பவர்கள் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது. மேலும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் தான் பெண்  உயிரிழந்ததாகவும், மருத்துவர்கள் அலட்சியத்தோடு  செயல்பட்டதாவும்  குற்றம்சாட்டினர். 

இந்நிலையில் சேலம் மகப்பேறு சிகிச்சை பிரிவின் வளாகத்தின் முன்பாக கணவர் மற்றும் மாமனார் உள்ளிட்டோர் கீழே விழுந்து கதறி அழுந்தனர். இனியாரும் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்களை அழைத்துச் செல்லவேண்டாம் என்று கூறி அழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *