உயிருடன் இருக்கும் அம்மா இறந்து விட்டதாக ஒரு கோடி சொத்துக்களை ஆட்டயப்போட்ட மகன்…!

கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரத்தில்  காவேரி அம்மாள் (86) என்பவர் உயிருடன் இருக்கும் போதே அவர் இறந்து விட்டதாக கூறி சகோதரிகளின் ஒரு கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க முயன்ற சகோதரர் தண்டபாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி சகோதர, சகோதரிகள் வருவாய் மற்றும் காவல் துறையினரிடம் புகார்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்குட்பட்ட  உமாமகேஸ்வரபுரம் அருகில் உள்ள சாரங்கபாணி பேட்டை கிராமத்தில் மறைந்த கனகராஜன் அதே கிராமத்தில் உள்ள ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு மேல் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை தனது மனைவி காவிரி அம்மாளுக்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

கனகராஜன் – காவேரி அம்மாள் தம்பதியினருக்கு மூன்று மகன்கள் மூன்று மகள்கள் இதில் ஒரு மகள் ரேவதி என்பவர் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் காவேரி அம்மாள்  தனது பெயரில் உள்ள ஒரு பகுதி சொத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகள்களான தேன்மொழி, ஜெயபாரதி, ரேவதி ஆகியோருக்கு பத்திரபதிவு செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில்,காவேரி அம்மாளின் இரண்டாவது மகனான தண்டபாணி என்பவர், தனது தாயார் காவேரி அம்மாள் உயிருடன் இருக்கும் போதே, அவர் இறந்து விட்டதாக கூறி அவரது சொத்துக்களை தனது பெயருக்கு பட்டாவை மாற்றியதுடன் அதனை தனது மனைவி பெயருக்கு செட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளார். இந்த தகவல் தண்டபாணி சகோதரிகளுக்கு தெரிய வரவே,

தாய் காவேரி அம்மாள் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறி,  தாயார் பெயரில் உள்ள வருவாய் துறை ஆவணங்களை தனது பெயருக்கு தண்டபாணி மாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்ட இடத்தை தனது மனைவி பெயருக்கு தண்டபாணி சாசனம் செய்து கொடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனை தொடர்ந்து வருவாய்துறை ஆவணங்களில்  பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள தனது தாயாரின் சொத்துக்களின் பத்திரப்பதிவை  ரத்து செய்ய வேண்டும் என கும்பகோணத்தில் உள்ள மாவட்ட பதிவாளர்  அலுவலகத்தில் தேன்மொழி ஜெயபாரதி கார்த்திகேயன் செந்தில்குமார் ஆகியோர் புகார் கொடுத்தை தொடர்ந்து பத்திரபதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் தனது தாயார் உயிருடன் உள்ள போதே அவர் இறந்து விட்டதாக கூறி  பட்டா உள்ளிட்ட வருவாய் துறை ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்திட வேண்டும் என கும்பகோணம் கோட்டாட்சியரிடமும், கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலையத்திலும் பாதிக்கப்பட்ட தேன்மொழி ,ஜெயபாரதி கார்த்திகேயன் செந்தில்குமார் ஆகியோர் புகார் கொடுத்துள்ளனர்.

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில், உயிருடன்  தாய் இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக கூறி ஆவணங்களை திருத்திய சம்பவம் கும்பகோணம் அருகே உமா மகேஸ்வரபுரம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *