நிதியமைச்சரின் கருத்து திமுக கருத்தா? ஒரே கன்பியூஸா இருக்கு… மார்க்சிஸ்ட் கே. பாலகிருஷ்ணன்

கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்  செய்தியாளர்களை சந்திக்கையில் பாஜக ஆட்சி எல்லை தாண்டி ஆபத்தை நோக்கி செல்கிறது.  மக்களவை கூட்டத்தை ஒரு நாள் கூட முழுமையாக நடத்தவில்லை.  அதானி சொத்து குறித்து பாராளுமன்ற விசாரணை குழு அமைக்க  வேண்டும் என்பதே ஒட்டுமொத்த எம்பிக்களின் கோரிக்கை. 

மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் குறித்த  விவாதம் கூட நடைபெறவில்லை.  காட்டுமிராண்டித்தனமான, கண்மூடித்தனமான நடைமுறையை பாஜக அரசு பின்பற்றுகிறது. உச்சநீதிமன்றமே குழு அமைக்க அறிவித்துள்ளது.  ஏன் மோடி அரசு தயங்குகிறது.

அதானி சொத்து குவிப்புக்கும் பாஜக ஊழலுக்கும் தொடர்பு உள்ளது.  அதானியும் மோடியும் கூட்டு களவாணிகள் போல செயல்படக்கூடிய நிகழ்வுகள் நடைபெறுகிறது. ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாட்டின் பொருளாதாரம் முடங்கி போய் உள்ளது.  இந்த சூழ்நிலையில. சுங்கச் சாவடிகளில் 10 சத கட்டண உயர்த்தப்பட்டுள்ளது.   மேற்கு மாவட்டங்களில் டெக்ஸ்டைல் தொழிலே முடங்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

பாசிச, சர்வாதிகார பாதையை நோக்கி மத்திய அரசு செல்கிறது. தமிழக நிதியமைச்சர் சில நேரங்களில் சொல்லும் கருத்துகள் திமுக கருத்தா… நிதியமைச்சரின் சொந்த கருத்தா. என தெரியவில்லை.  புதிய தாராளமய கொள்கையை நோக்கியே நிதியமைச்ரின் பேச்சு உள்ளது.

அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட தொகுப்பூதிய, மதிப்பூதியத்தை ஏன் திமுக ஆட்சி தொடர வேண்டும். அவுட்சோர்சிங் தமிழகத்தில் இல்லை என்பதை உருவாக்க வேண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களை அழைத்து பேசி தீர்க்க வேண்டும். தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வழங்கியிருந்தாலும் அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்

உரிமத்தொகை உள்பட எந்த அரசு திட்டத்தையும் எல்லாருக்கும் கொடுக்க வேண்டும் என்பது இல்லை.  யாருக்கு தேவையோ அவர்களுக்கு வழங்க வேண்டும். வடமாநில தொழிலாளர்களால் தமிழக தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என சொல்ல முடியாது.  மத்திய அரசு  வேலைவாய்ப்பில் தமிழகத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *