கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு!ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடத்தமுடிவு.

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

கர்நாடகா சட்டசபை தேர்தலானது மே 10-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ,மே 13-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.224 சட்டசபை தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில், 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.இதனால் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் அடுத்தடுத்து கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோரும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.இதனிடையே அண்மையில் காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியிலும், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.


தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்தது. இந்த நிலையில் இன்று 11.30 மணிக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. 224 சட்டசபை தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தற்போது கர்நாடகாவில் 119 எம்எல்ஏ-க்களுடன் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு 75 எம்எல்ஏ-க்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 28 எம்எல்ஏ-க்களும் உள்ளனர்.இதனிடையே வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. அண்மையில் பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து வயநாடு நாடாளுமன்றத் தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கர்நாடகா சட்டசபை தேர்தலுடன், வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *