சினிமாவை மிஞ்சம் கூட்டம் கூட்டமாக விச பூச்சிகளின் திடீர் தாக்குதல்…!

தேனி மாவட்டம் போடியில்  மா மரங்களில் திடீர் தாக்குதல் நடத்தும் பூச்சியினம், கூட்டம் கூட்டமாக மாம்பூக்களை சேதப்படுத்தி வருவதால் மாவிவசாயிகள் செய்வதரியாது திகைத்துள்ளனர். குறிப்பாக ஓடிப் பகுதியில் பிச்சாங்கரை ,வலசை, ஊத்தாம்பாறை கொட்டகுடி ,அருங்குளம், உலுக்குருட்டி, மற்றும்மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளிலும் வடக்கு மலை அடிவாரப் பகுதியிலும் பல்லாயிரம் ஏக்க நிலப்பரப்பில் மாங்காய் விவசாயம் செய்து வருகின்றனர்

முக்கனிகளில் முதன்மையானதாக உள்ள மாங்கனிகள் தேனி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு வரை மாமரங்கள் கொத்துக்கொத்தாய் பூத்து குலுங்கின. ஆனால் தற்போது விவசாயிகளால் செல்பூச்சிகள் என்று அழைக்கப்படும் பூச்சிகள் மாம்பூக்கள் மற்றும் காம்புகள் பிஞ்சுகளை சேதப்படுத்தி வருவதால் 10சதவிகித பலன்கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையை தெரிவிக்கின்றனர். 

பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்துப் பார்த்தும் பூச்சிகள் கட்டுக்குள் வராமல் பரவி வருவதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிராகும் மாங்காய்கள் முழுவதுமாக பாதிப்படைந்து வருவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்திற்குள்ளாகி உள்ளனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் போடி பகுதிகளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள மாமரங்களில் கடும் சேதத்தை இந்த பூச்சிகள் ஏற்படுத்தியுள்ளன. 

இந்தவகை பூச்சிகள் இந்த ஆண்டில் புதிதாக பரவி வருவதாகவும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு கட்டுப்படாமல் இருப்பதால் மாம்பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்ந்து மரங்கள் அனைத்தும் வெறும் காம்புகளுடன் காணப்படுகிறது. 

இதனால் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு இதை நம்பியுள்ள விவசாயக்குடும்பங்களும் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுத்து மாவிவசாயிகள் வாழ்வாதரம் சிறக்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மாவிவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *