இதுதான் தமிழ் மண்: மசூதி திறப்புவிழாவில் இந்து, கிறிஸ்டின் சமத்துவ சீர் வரிசை…!

புதுக்கோட்டை காமராஜபுரத்தில் மஸ்ஜித் முஹம்மது இப்ராஹீம் ஜும்ஆ பள்ளிவாசல் திறக்கப்பட்ட நிலையில் இந்த பள்ளிவாசல் திறப்பிற்கு இந்து முஸ்லிம் கிறிஸ்டின் என அனைத்து மதத்தினரும் ஒன்றாக இணைந்து சமத்துவமாக சீர் எடுத்து ஊர்வலமாக சென்றது மத ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது, மேலும் பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள ஓம் சக்தி கோயிலிலிருந்து கோயில் நிர்வாகம் சார்பில் சீர் எடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம் 9ம் வீதியில் மஸ்ஜித் முஹம்மது இப்ராஹீம் ஜும்ஆ பள்ளிவாசல் பழமையானது. இந்தப் பள்ளிவாசல் கடந்த சில ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பள்ளிவாசல் திறப்பை முன்னிட்டு பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் அதே போல் அனைத்து சமுதாய மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிவாசல் திறப்புக்கு அனைத்து கட்சி பிரமுகர்களும் வருகை தந்து சிறப்பித்தனர்.

இந்நிலையில் இந்த பள்ளிவாசல் திறப்பை முன்னிட்டு கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் பாதிரியார்கள், அதேபோல் இந்து மதத்தைச் சேர்ந்த குருக்கள், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஹஜரத் என இந்து முஸ்லிம் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து சமத்துவமாக பல்வேறு வகையான பொருட்களை சீராக எடுத்துச் சென்றனர். இது மத ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது. மேலும் சீரெடுத்துச் சென்ற அனைத்து சமுதாய மக்களையும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் சால்வை அணிவித்து ஆரத்தழுவி வாழ்த்துக்கள் தெரிவித்து வரவேற்றனர். 

மேலும் பள்ளிவாசல் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையிலும் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். மேலும் பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள ஓம் சக்தி கோவிலில் இருந்து கோயில் நிர்வாகம் சார்பில் பள்ளிவாசல் திறப்பிற்கு சீர் எடுத்துச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பள்ளிவாசலுக்கு சீர் எடுத்துச் சென்ற அனைத்து மதத்தினரும் கூறுகையில்:- காமராஜபுரத்தில் உள்ள மக்கள் மதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்குள் எந்த வித சண்டை சச்சரவு இல்லாமல் இருந்து வரக்கூடிய நிலையில் பழமை வாய்ந்த பள்ளிவாசல் புதுப்பித்து திறப்பு விழா நடைபெறுவதற்கு அனைத்து சமுதாய மக்களுக்கும் பள்ளிவாசல் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அனைத்து சமுதாய மக்களும் இதில் பங்கேற்று பள்ளிவாசலுக்கு சீர் எடுத்துச் செல்வதை மகிழ்ச்சியுடன் செய்து வருவதாகவும் 

தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவிற்கே இது உதாரணமாக திகழும் வகையில் மத ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் இந்த ஒற்றுமை தான் இயற்கை என்றும் சிலர் வாக்குக்காக பிளவை ஏற்படுத்த நினைத்தாலும் தமிழ்நாட்டில் அது எப்போதும் நடக்காது என்றும் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருப்பது தான் அரசியல் சட்டமும் கூட அந்த ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று காமராஜபுரத்தில் பள்ளிவாசல் திறப்பு நடைபெற்று உள்ளது இது மகிழ்ச்சியை தருவதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *