மேற்கு தொடர்ச்சி மலையில் தீ… 100 ஏக்கர் சந்தன மரங்கள் எரிந்து நாசம்…!

Fire

போடி தமிழக கேரளாவை இணைக்கும்  மேற்கு மலை தொடர்ச்சியில் வடக்கு மலை பகுதியில் அருங்குளம் கிழக்கு பீட் என்ற இடத்தில் சுமார் 100 ஏக்கருக்கு விலை உயர்ந்த தேக்கு சந்தன மரங்கள் எரிந்து நாசம் .

தமிழகத்தில் குறிப்பாக தேனி மாவட்டம் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகும் இப்பகுதியில் தமிழக கேரளாவை இணைக்கும் மேற்கு தொடர்ச்சியில் வடக்கு-மலைப் பகுதியில் – அகமலைகிராமத்திற்கு செல்லும் பகுதியில் அருங்குளம் கிழக்கு பீட் என்ற இடத்தில் வெகுவாக காட்டுத்தீ பரவி வருவதால் விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன இப்பகுதியில்  பட்டா நிலங்களில் – காப்பி, மிளகு.நெல்லி, இலவு, பலா, உள்ளிட்ட மரங்களும்,  வனத்துறைக்கு சொந்தமான ரிஷிவர் பாரஸ்ட் உள்ள பகுதியிலும்தேக்கு சந்தனம் மருது நெல்லி கருங்காலி உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் அதிகமாக உள்ளன 

குறிப்பாக தேனி மாவட்டத்தில் எண்ணெய் பசை உள்ள மரங்கள் நிறைவாக உள்ளன இன்று அருங்குளம் கிழக்குபீட் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயினால சுமார் 100 ஏக்கருக்கு மேலாக வனப்பகுதி காட்டுத்தீ பரவி வருகிறது. கடந்த 2017 ம் ஆண்டு குரங்கணி வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயினால் 28 உயிர்கள் பலியான நிலையில் மக்கள் மனதில் வடுவகா உள்ள நிலையில் தொடர்ந்து இப்போது காட்டுத்தீ பரவி வருகின்றன

குறிப்பாக -தேனிமாவட்டம் கோடைகாலத்தில் எரிந்து வரும் வனப் பகுதியாக அமைந்துள்ளது

கோடைகாலம் துவங்கி விட்டாலே தேனி மாவட்டத்தில் போடி வனப்பகுதியில் உள்ள11 ஆயிரம் ஹெக்டோ ர்நிலப்பரப்பு எரியும் அபாயம் உள்ளது.தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் காட்டுத் பரவி வரும் நிலையில் வனத்துறையினர் இரவும் பகலாக காட்டுத்தீயை அணைத்து வருகின்றனர் 

எவ்வித உபகரணங்களும் இல்லாத நிலையில் மரக்கிளை | மரப் கொப்புகளை வைத்துக்கொண்டு தீஅடித்தும், மண் அள்ளிவீசியும் தீயை அணைத்துவருகின்றனர்மத்திய மாநில அரசுகள் இயற்கை வளங்களை காககவும வனங்களை காக்க வனத்துறையினருக்கு தீயணைப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என மன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *