‘நாங்க இருக்கோம்…’ வடமாநில தொழிலாளர்களுக்கு தேனீர் விருந்து தந்த ஆட்சியர்…!

உதகை அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் 700-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுரை. குடிக்க தேனீர் வழங்கி அச்சமின்றி பணியாற்றுமாறும் ஏதேனும் பிரச்சனை இருந்தால் காவல்துறையை உடனடியாக தொடர்புகொள்ளுமாறும் வேண்டுகோள்.

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் வடமாநில தொழிலளர்கள் தாக்கபடுவதாக சமூக வலை தலங்களில்  வதந்திகள்  பரவியது. இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனையடுத்து தமிழக அரசு விரைந்து செயல்பட்டு வதந்திக ளை நம்ப வேண்டாம் என்று கூறியதுடன் வடமாநில தொழிலாளர்கள் அச்சமின்றி பணியற்றுமாறு கேட்டு கொண்டது. இந்த நிலையில் 11 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள்  பணியாற்றி வரும் நீலகிரி மாவட்டத்திலும் புலம் பெயர் தொழிலாளர்களை சந்தித்து அச்சமின்றி பணியாற்றுமாறு கேட்டுகொள்ளபட்டது. 

இந்த நிலையில் உதகை அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் 700-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் நேரில் சந்தித்து வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தைரியமாக பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார். 

மேலும்  நீலகிரி மாவட்டத்தில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை அச்சமின்றி மார்க்கெட் பகுதிக்கு வாங்கி கொள்ளலாம் என்றும் அனைத்து இடங்களிலும் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதால் ஏதேனும் பிரச்சனை இருந்தால் காவல்துறையை உடனடியாக தொடர்புகொள்ளுமாறும் வலியுறுத்தினார். பின்னர் அவர்களுக்கு குடிக்க தேனீர் வழங்கி உற்சாகபடுத்தினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *