அளவோடு எடுத்தால் சத்து மாத்திரை…. அளவுக்கு மீறினால் சாவு மாத்திரை….

death

வெங்கட்ராம்

இந்தியாவைப் போல வளரும் நாடுகளில் குழந்தைகளுக்கு சத்து பற்றாக்குறை என்பது பெரும் ஆபத்தாக பார்க்கப்படுகிறது. வறுமையின் கொடுமையில் வளரும் சில குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவை தர வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனை சரி கட்டுவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சியை செய்து வருகின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டு அரசு பள்ளி குழந்தைகளுக்கு சத்து மாத்திரைகள் இலவச உணவு போன்ற பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த திட்டங்களில் செய்து வருகின்றது. ஆனால் சம்பந்தப்பட்ட பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களின் கவனக்குறைவால் சில விரும்பத்தகாத விஷயங்கள் நடந்து விடுகின்றன. அப்படித்தான் உடல் நலத்திற்காக கொடுக்கப்பட்ட சத்து மாத்திரையை பள்ளி குழந்தைகள் தங்களுக்கு இடையில் போட்டி போட்டு அதிக அளவு சாப்பிட்டு இருக்கிறார்கள்.

இதனால் மாலையில் குழந்தைகள் தலைசுற்றல் போன்ற பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மருத்துவர்கள் 14 மணி நேரம் கண்காணிப்புக்கு பின் தான் எது ஒன்றும் கூற முடியும் என்று கூறிவிட்டார்கள். இன்று காலை துரதிஷ்டவசமாக அதில் ஜெய்பா என்கிற ஒரு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். எதுவாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் ஆபத்துதான் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆசிரியர்களும் பள்ளிப் பொறுப்பாளர்களும் இதுபோன்ற விஷயத்தை குழந்தைகளிடம் தரும்போது சற்று அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் உயிரிழந்த மாணவிக்கு 3 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *