பல்கலைக்கழகம் உயர்த்திய கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் உயர்த்தி உள்ள தேர்வு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கும்பகோணம் அரசினர் கலை கல்லூரி வாசல் முன்பு அமர்ந்து SFI அமைப்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.கல்லூரிக்குச் சென்ற மாணவ, மாணவியர்களை போராடும் மாணவர்கள் தடுத்தனர். இதனை கண்டித்து காவல்துறையினர் தடுத்த மாணவர்களை நகர்த்த முற்பட்டபோது காவல்துறையினருக்கும் போராடும் மாணவர்களுக்கு இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. 

பாரதிதாசன் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு முதல் தேர்வு கட்டணத்தை உயர்த்தி உள்ளது என்றும்,இந்த தேர்வு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும்,அரியர்ஸ் தேர்வு எழுதுவதற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்கு தேர்வு கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாரதிதாசன் உயர்த்தி அறிவித்துள்ள   தேர்வு கட்டணத்தை உடனடியாக குறைக்க வலியுறுத்தி இன்று கும்பகோணம் அரசினர் கலை கல்லூரி வாசல் முன்பு SFI  அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் மற்ற மாணவர்கள் கல்லூரிக்குள் சென்றனர். ஒரு கட்டத்தில் கல்லூரிக்குள் சென்ற மாணவர்களை போராடும் மாணவர்கள் தடுத்தனர் . இதனை காவல்துறையினர் கண்டித்து கல்லூரிக்கு செல்பவர்களை தடுக்க கூடாது என கூறினார்கள்.

இதனால் காவல்துறையினருக்கும் போராடும் மாணவர்களிடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எஸ்எப்ஐ மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள்  தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் கல்லூரி வாசலில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தால் மற்ற மாணவர்கள் கல்லூரிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *