சட்ட விரோத மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பரிதாபமாக பலி…!

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே விவசாய தோட்டத்திற்கு வைத்த மின் வேலியில் சிக்கி  மூன்று காட்டு யானைகள் உயிரிழப்பு. வனத்துறை விசாரணை தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே  காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் விவசாய தோட்டத்தை சுற்றி வைத்த மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்ததில் மூன்று காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது,

சட்ட விரோதமாக மின்வேலி அமைத்த முருகேசனை மாரண்டஅள்ளி போலீசார் கைது செய்திருக்கின்றனர்.. சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த சக்தி, பெங்களூரில் தொழில் செய்து வருகிறார், இவருக்கு சொந்தமான நிலத்தை பாறைக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன் (55) என்பவர் குத்தகை்கு எடுத்து விவசாயம் செய்து வந்திருக்கிறார், விளைப்பயிர்களை சேதபடுத்த வரும் காட்டுப்பன்றி, உள்ளிட்ட வன விலங்குகளை தடுக்க சட்ட விரோதமாக மின் கம்பத்திலிருந்து  மி்ன்சாரத்தை எடுத்து பயன்படுத்தியிருக்கிறார்..

வனத்திலிருந்து அவ்வப்போது வெளிய வந்த ஐந்து காட்டு யானைகளும் இரவு பகலாக விளைநிலங்களில் சுற்றி வந்தது, வனத்துறையினர் விரட்டியடித்து வந்தனர், இந்த நிலையில் நேற்றிரவு, மின்சாரம் பாய்ந்து மூன்று பெண் யானைகள் உயிரிழந்திருக்கிறது, அதன் குழந்தகைளான இரண்டு குட்டி யானைகள் நல்வாய்ப்பாக  உயிருடன் உள்ளது

உயிரிழந்துள்ள காட்டு யானைகளை கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்த பிறகு அடக்கம் செய்ய வனத்துறை திட்டமிட்டிருக்கின்றனர் யானைகள் உயிரிழந்த இடத்தில் மின் இ ணப்பை  மின் ஊழியர்கள் துண்டித்திருக்கின்றனர் யானைகள் உயரிழந்துள்ள இடத்திற்கு அருகிலேயே, காட்டுப்பூனை, கீறிப்பிள்ளைகள் படிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் இரும்பு கூண்டு ஒன்று இருப்பது, கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியும், யானைகள் உயிரிழந்த சம்பவத்தில் வனத்துறையினர் அலட்சியமாக இருந்திருக்கின்றனர், சம்மந்தபட்ட வனத்துறை ஊழியர்கள்  மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என தெரிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *