தமிழகத்தில் பூகம்பமா…! மக்களை பாதுகாப்பாக இடமாற்றம் செய்யும் மாவட்ட ஆட்சியர்…!

வேலூர்மாவட்டத்தில் பூகம்பம் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அங்குள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி வேறு இடத்தில் வீடுகளை கட்டிதர அரசு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கிறது பள்ளிகொண்டா உழவர் சந்தை பணிகள் விரைவில் முடிவடையும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் காட்பாடி பள்ளிக்குப்பம் கிராமத்தில் கால்நடைத்துறையின் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாமானது நடந்தது இதனை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார் இதில் மாநகராட்சி ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாமன்ற உறுப்பினர் விமலா. கால்நடை துறை உதவி இயக்குநர் அந்துவன் உள்ளிட்ட -பலர் கலந்துகொண்டனர் கால்நடைகளுக்கு தடுப்பூசிகளும் போடப்பட்டது

பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர் மாவட்டத்தில் சில பகுதிகள் பூகம்பம் வரும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது கடந்த ஆண்டும் அதற்கு முன்பும் பூகம்பம் வந்தது மத்திய அரசு கனடறிந்து இந்த ஆண்டும் லேசான நில அதிர்வு வரும் என கடிதம் அனுப்பியுள்ளது அதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மக்களை வேறு இடங்களுக்கு சென்று மாற்று இடங்களில் வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுத்து வருகிறோம் 

அகரம்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா ஒன்று துவங்கபடவுள்ளது நிதி ஒதுக்கி பணிகள் நடந்து வருகிறது பள்ளிகொண்டா உழவர் சந்தை பணிகள் 60 சதவிகிதம் முடிவடையும் நிலையில் உள்ளது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் கோமாரி நோய் தடுப்பூசியை மக்கள் பயன்படுத்தி கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *