காட்டுத்தீயை அணைக்க முடியாமல் திணரும் வனத்துறை… கொடைகானலில் பரிதாபம்…!

Fire

கொடைக்கானல் அருகே பெருமாள்மலை மற்றும் பெரும்பள்ளம் ஆகிய வனப்பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை எரிந்து வரும் காட்டுத்தீ – தீயை அணைப்பதில் வனத்துறையினர் மெத்தனம் .

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாகவே பகலில் நல்ல வெயில் வெளுத்து வாங்கி வருகிறது . இந்த நிலையில் கொடைக்கானலில் நிலவும் கடும் வெயிலின் காரணமாக மலைப்பகுதியில் வனப்பகுதி மட்டுமின்றி விவசாய நிலங்கள் உள்ளிட்டவை காய்ந்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் காட்டு தீ ஏற்படும் அபாயமும் நிலவி வந்தது . 

இந்த சூழலில் கொடைக்கானல் நகர் பகுதியில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள பெரும்பள்ளம் மற்றும் பெருமாள்மலை வனப்பகுதியில் நேற்று இரவு திடீரென காட்டுத் தியானது பற்றி எரிந்தது . தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்துவதில் தாமதம் ஏற்படுத்தினர் . இதனால் வனப்பகுதியில் அமைந்துள்ள அரிய வகை மூலிகைகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமாகி வருகிறது . தொடர்ந்து இன்றும் இந்த காட்டுத்தீ எரிந்து வருவதால் வனப்பகுதி எரிந்து நாசமாகி வருகிறது . 

காற்றின் வேகமும் அதிகரித்து உள்ளதால் தீயை அணைப்பதில் வனத்துறையின் மெத்தனம் காட்டி வருகின்றனர். வருடம் தோறும் வனத்துறையின் மூலமாக வனப்பகுதிகளில் தீ தடுப்பு எல்லைகள் அமைக்கப்படும் . ஆனால் இந்த வருடம் தீத்தடுப்பு எல்லைகள் அமைக்கப்படாததால் காட்டு தீ ஏற்பட்டு வருவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *