சூப்பர்: நடமாடும் நூலகத்தின் அடுத்த முயற்சி ஆட்டோ நூலகம்…!

புத்தகம் வாசிப்பு ஒருவரின் அறிவை மெருகேற்றும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனடிப்படையில் வாசிப்பு குறைந்திருக்கின்ற இந்த கால கட்டத்தில், பயண நேரத்தை பயனுள்ளதாக மாற்ற மாநகர் போலிஸார் ஆட்டோக்களில் மினி நூலகம் அமைத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கோயமுத்தூர் மாநகர போலிஸார், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியுடன் இணைந்து,  ஆயிரம் ஆட்டோக்களில் புத்த ரேக் அமைக்கவிருக்கின்றன்ர். 

முதல்கட்டமாக 500 ஆட்டோக்களில் புத்தக ரேக் அமைத்து புத்தகங்களை வைத்திருக்கின்றனர். இந்த புத்தக ரேக்கில் Travel Tales Of A God , பொன்மொழி களஞ்சியம், திணிப்பும் எதிர்ப்பும், தனிமை, பொது அறிவு பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

ஆட்டோ நூலகத்தை திறந்து வைத்து பேசிய மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், அறிவார்ந்த சமுதாயம் உருவாக இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், அதே போன்று காவலர் சிறார் மன்றங்களை மநாகர் முழுவதும், 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்படுத்த பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் பள்ளிக்கு செல்லும் அல்லது செல்லாத குழந்தைகள் படிக்க காவலர் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், 

நெருக்கமாக உள்ள குடியிருப்பு பகுதிகளில் தெரு நூலகங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், குழந்தைகள் மாலை நேரத்தில் தங்களது நேரத்தை பயனுள்ளதாக  பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது வரை 500க்கும் மேற்பட்ட ஆட்டோகளில் ஆட்டோ நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்பவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் எனவும் விபத்துக்களை தடுப்பதில் ஆட்டோ ஓட்டுநர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பார்ப்பதாகவும், 

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முதல் உதவி பயிற்சியும் அளிக்கப்பட்டு வருதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், கோவை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து கட்டுப்படுத்த பல்வேறு முன்னெடுக்குள் எடுக்கப்பட்டுள்ளதோடு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *