ஈரோடு  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக தொடங்கியது…!

Election

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பு, எப்போதும் இல்லாத வகையில் வாக்காளர்கள் சாரை சாரையாக படை எடுத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர், சாலைகள் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகளவு உள்ளதால் தேர்தல் விழாக்கோலம் பூண்டுள்ளது, முதல் வாக்காளர்கள் இளைஞர்கள் இல்லத்தரசிகள் கைக்குழந்தையுடன் உள்ள தாய்மார்கள், இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்த தந்தை, மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் வாக்களிப்பதற்காகவே சென்னையில் உடல்நிலை சரியில்லாத தாயாரை மருத்துவமனையில் விட்டுவிட்டு வந்து வாக்களிக்க வந்த பெண்மணி என பல தரப்பட்ட வாக்காளர்களும் உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடன் வரிசையில் காத்து நின்று வாக்களித்து வருகின்றனர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்களிலும் காலை முதலே வாக்குப்பதிவு என்பது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.‌ 1206 தேர்தல் அலுவலர்கள் தேர்தல் நடத்தும் பணியில் ஈடுபட்டு உள்ள நிலையில் வாக்குச்சாவடி மையங்களில் அனைத்துவித அடிப்படை வசதிகளும் அதே போல் 2400க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி ஏந்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிபி அக்ரஹாரம் பகுதியில் மதரசா மகளிர் உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி இசைப்பள்ளி, அன்னை சத்யா நகரில் உள்ள தனியார் பள்ளி என அப்பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் காலை முதலே சாரை சாரையாக படையெடுத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

வாக்குப்பதிவு தொடங்கிய சற்று நேரத்திலேயே இத்தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்த் தனது வாக்கை பதிவு செய்ய வந்தபோது அவர் அக்கட்சியின் வேஷ்டியும் கட்சி துண்டும் அணிந்து வந்ததால் தேர்தல் மண்டல அலுவலர் குலோத்துங்கன் கட்சி வேஷ்டியும் துண்டும் அணிந்து வரக்கூடாது அது தேர்தல் விதிமீறல் என்று கூறியதால் வேட்பாளர் மற்றும் அவருடன் வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பின்னர் வேட்பாளர் ஆனந்த் வெளியே சென்று தனது உடையை மாற்றிக்கொண்டு மீண்டும் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார். மேலும் இந்த வாக்குப்பதிவானது முறையாக நடைபெற்று வருவதாகவும் அனைத்து வித பாதுகாப்பு வசதிகளும் திருப்திகரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பிபி அக்ரஹாரம் பகுதியை சுற்றியுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்காளர்கள் காலை முதல் கூட்டம் கூட்டமாகவும் சாரை சாரையாகவும் சாலையில் சென்று வருவதால் அப்பகுதியே தேர்தல் திருவிழா கோலம் பூண்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடி மையங்களில் முதல் முறையாக வாக்களிக்க வரும் வாக்காளர்கள் இளைஞர்கள் குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள் இல்லத்தரசிகள் இரண்டு குழந்தைகளுடன் வந்த தந்தை, தள்ளாடும் வயதிலும் குச்சி ஒன்றி வந்த முதியவர், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து வகையான வாக்காளர்களும் எப்போதும் இல்லாத வகையில் தன்னெழுச்சியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து தங்களது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

குறிப்பாக மதரஸா உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 15ம் நம்பர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் அடையாள அட்டையை தவிர மற்ற எந்த ஆவணங்களும் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று தேர்தல் மண்டல அலுவலர் தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் 12 வகையான ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என்று கூறியதாக தெரிவித்து சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மதரஸா மகளிர் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது தாயாருக்கு உடல்நிலை சரி இல்லாததால் சென்னையில் மருத்துவமனையில் வைத்து மருத்துவம் பார்த்து வந்த நிலையில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தனது தாயாரையும் மருத்துவமனிலேயே விட்டுவிட்டு ஈரோடு கிழக்கு பகுதிக்கு வந்து தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார். நமக்கான மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இது அதனால் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற காரணத்தினால் வாக்களிக்க வந்ததாகவும் ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் மதரஸா மகளிர் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை அதிமுக வேட்பாளர் தென்னரசு பார்வையிட்டு பின்னர் வரிசையில் நின்ற மக்களிடம் கையெடுத்து கும்பிடும் நீண்ட வரிசையில் காத்து நிற்பதால் விறுவிறுப்பாக வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *