2 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டை கடத்திய 10 பேர் கைது…  

கடப்பா மற்றும் செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி படை போலீசார் மூன்று வெவ்வேறு  இடங்களில் நடைபெற்ற சோதனையில் 10 பேரை கைது செய்து ₹ 1.40 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்

கடப்பா மாவட்டம் போலீசார் நேற்று அதிகாலை 5.00 மணிக்கு கொண்டாபுரம் மண்டலம் தாடிபத்திரி – முந்தனூர் பைபாஸ் சாலையில் உள்ள புஜ்ஜி சீனு என்பவருக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டம்  அருகே  சில கடத்தல்காரர்கள் செம்மரங்களை ஏற்கனவே பதுக்கி வைத்து  வாகனங்களில் ஏற்றி வருவதை  அறிந்த  போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் கடத்தல்காரர்கள் கற்கள் மற்றும் கோடாரிகளால் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர். 

இதில் ஐந்து பேர் தப்பி ஓடிய நிலையில்   நீண்ட காலமாக தலைமறைவாக  இருந்த செம்மரக் கடத்தல்காரரான மந்தாடி பாஸ்கர்  மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேரை கைது செய்து ₹ 1 கோடி மதிப்புள்ள 40 செம்மரங்கள் மற்றும் சரக்கு ஏற்றி செல்லும் வேன்,  ஸ்கார்பியோ கார்,  ஒன்று, 04 மோட்டார் சைக்கிள்கள், 07 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். இதில் கடப்பா மாவட்டம் புரோதட்டூரை சேர்ந்த பாஸ்கர்  15 ஆண்டுகளாக செம்மரங்களை வெட்டி கடத்தி வந்த நிலையில் 10  செம்மரக்கடத்தல் வழங்குகள் உள்ள நிலையில் தலைமறைவாக இருந்தபடி தனது கூட்டாளிகள் மூலம் கடத்தலில் ஈடுப்பட்டு வந்துள்ளான். 

தற்போது பாஸ்கருடன்  நெல்லூரை சேர்ந்த ஸ்ரீனு, தாடிபத்திரியை சேர்ந்த நரெட்டி லக்ஷ்மிநாராயண ரெட்டி, முலே ராமச்சந்திர ரெட்டி, புலிவெந்துலாவை சேர்ந்த துபாகுல கதர் பாஷா,  ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர ஆகிய 6 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஐந்து பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக எஸ்பி அன்புராஜன் தெரிவித்தார்.

இதேபோல் ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம் சானிப்பேட்டை மற்றும் பாலபள்ளி வனச்சரகத்தில்  அதிரடிப்படை போலீசார் ரோந்து சென்று 4 கடத்தல்காரர்களை  கைது செய்து 23  செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.  அதிரடிப்படை எஸ்.பி. சக்ரவர்த்தி உத்தரவின்படி, டிஎஸ்பி முரளிதர் மேற்பார்வையில் அன்னமையா மாவட்டத்தின்  சுண்டுப்பள்ளி அருகே சென்றபோது சிலர் செம்மரங்களுடன் வருவதை பார்த்து அவர்களை சுற்றி வளைக்க முயன்றபோது சிலர் தப்பி ஓடிய நிலையில்  ​நான்கு பேரை பிடித்து  12 செம்மரங்களை   பறிமுதல் செய்தனர். 

இதில் அன்னமய்யா  மாவட்டத்தை சேர்ந்த சோமலராஜு மகேஸ்வரராஜு (37), கொல்ல அசோக்குமார் (32), மோடம் லட்சுமிகாந்த் (24), சோழராஜு வெங்கடராஜு (67) என ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் பாலபள்ளி சரகத்தில் ரோந்து சென்றபோது சிலர் செம்மரக் கட்டைகளை எடுத்துச் செல்வதைக் அறிந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது செம்மரக்கட்டைகளை கீழே வீசிவிட்டு இருட்டில் தப்பி ஓடினர். அங்கு 11 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் இருவேறு இடங்களில் இருந்து ₹ 40 லட்சம் மதிப்புள்ள 23 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்தனர். கடப்பா போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் இணைந்து ₹ 1.40 கோடி மதிப்புள்ள செம்மரம் பறிமுதல் செய்து 10 பேரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *