சென்னையை அடுத்து இந்த மாவட்டங்களுக்கெல்லாம் மெட்ரோ ரயில் வரபோகுது…!

சேலம் மாவட்டத்தில் மெட்ரோ அமைப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த (DFR) சாத்திய கூறு ஆய்வு பணிகள் ஏப்ரல் மாதத்தில் இறுதி செய்யப்படும்! மேலும் திருச்சி,திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட (DFR) சாத்திய கூறு பணிகளும், இறுதி கட்டத்தை எட்டிய நிலையில்  மே மாதத்தில் இறுதி செய்யப்பட்டும் என மெட்ரோ அதிகாரி தகவல்! 

சென்னை மெட்ரோ இரயில் முதல் கட்ட திட்டத்தில் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையிலும்,சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில்  2 வது கட்ட மெட்ரோ பணிகள் ரூ.63,246 கோடி ரூபாய் செலவில் மிக வேகமாக 3,4,5 என மூன்று வழிதடங்களில் 118.9 கி.மீ தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. 

தமிழக அரசு அறிவிப்பின் படி சென்னையைபோல  தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை,மதுரை,சேலம், திருச்சி,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்க்கான  ஆய்வுகளை மெட்ரோ இரயில் நிர்வாகம் ஒவ்வொரு கட்டமா செய்து வருகிறது.

அதன் அடிப்படையில் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ அமைப்பதற்கான ஆய்வு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக கோவையில் மொத்தம் 139 கி.மீ. தூரத்துக்கு 3 கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் என 46 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 46 கிலோமீட்டர் தொலைவில் அமைய உள்ள முதற்கட்ட பணிகளுக்கு ரூ.9,424 கோடி செலவும் ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பே விரிவான திட்ட அறிக்கையும் மெட்ரோ நிர்வாகம் தமிழக அரசிடம் சமர்பித்துள்ளது.

கோவை மெட்ரோவை பொறுத்தவரை (DFR) விரிவான சாத்திய கூறு ஆய்வறிக்கை மற்றும் (DPR) விரிவான திட்ட அறிக்கை இரண்டுமே சமர்பிக்கப்பட்டு தமிழக அரசு டெண்டர் விட அனுமதி வழங்கியதும் கட்டுமான பணியை தொடங்க உள்ளது.

அதேபோல மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ துாரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறு ஆய்வு அறிக்கையை (DFR) மட்டும்  தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தகட்டமாக (DPR) விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியிலும் சமீபத்தில் இறங்கியது மெட்ரோ நிர்வாகம். 18 ரயில் நிலையங்களுடன் திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரையில் 31 கி.மீ தொலைவிற்கு செயல்படுத்தப்பட உள்ள மதுரை மெட்ரோவின் (DPR) அதாவது விரிவான திட்ட அறிக்கையை  75 நாட்களில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தற்போது கோவை, மதுரையை தொடர்ந்து சேலம், திருச்சி , திருநெல்வேலியில் மேற்கொள்ளப்பட்டு வந்த (DFR)சாத்திய கூறு ஆய்வு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மெட்ரோ நிர்வாகம் சேலத்தில் மெட்ரோ அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் (DFR) சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் வரும் ஏப்ரல் மாத இறுதியில் இறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

அதேபோல திருச்சி மற்றும் திருநெல்வேலியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாத்திய கூறு ஆய்வுப் பணிகள் முழுவதும் நிறைவடைந்து ஏப்ரல் அல்லது மே மாத இறுதியில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மெட்ரோ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை,கோவை ல்,மதுரையை அடுத்து சேலம்,திருச்சி,திருநெல்வேலி ஆகிய மாவட்ட மெட்ரோ பணிகளில் கவனம் செலுத்தி உள்ளது மெட்ரோ நிர்வாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *