காதல் பறவை இருவாச்சிகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!

காதல் ஒவ்வொரு உயிரிக்கும் சொந்தமானது பறவைகளின் காதலுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் இருவாச்சி பறவைகள் ( மலபார் ஃபைட் ஹார்ன்பில்) குன்னூரில் உள்ள அடர்ந்த பள்ளத்தாக்கு பகுதியில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்துக்கொண்டிருப்பது வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பறவைகளின் காதலை பற்றி கூற வேண்டும் என்றால் இருவாச்சி  பறவையை பற்றித்தான் கூற வேண்டும் வேண்டும். இரைத் தேடுவதில் ஆரம்பித்து இளைப்பாறுவது வரை எங்குச் சென்றாலும் ஆண் பறவையும் பெண் பறவையும் இணைந்தே செல்கின்றன. காதலாகி கருவாகிற இனப்பெருக்க காலத்தில் இருபறவைகளும் அடர்வனத்தில் இருக்கிற மரக்கூடுகளை தேடி அலையும். இயற்கையாக இருக்கும் மரப்பொந்துகள்தான் இப்பறவைகளின்  கூடு.  இக்குடும்பத்தை ஆங்கிலத்தில்  “ஹார்ன்பில்”  என அழைக்கிறார்கள். 

இவை அளவில் சற்று பெரிதானவை.   பெரிய  நீண்ட அலகை உடையவை. அலகுக்கு மேலே கொண்டை போன்ற அமைப்பு இருக்கும். இவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வாழக்கூடியது. ஆண் பறவையும் பெண் பறவையும் பிரியாமல் வாழக்கூடியவை இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவை உணவு எடுத்து வந்து பெண் பறவைக்கு அளிக்கிறது. இனப்பெருக்க காலம் முடியும் வரையில் பெண் பறவை கூட்டிலே தங்குகிறது.  

இனப்பெருக்க காலம் முடிந்த பிறகு பெண் பறவை வெளியே வரும். உணவு தேடி செல்லும் ஆண் பறவை ஏதாவதொரு காரணத்தில் இறந்து விட்டால் கூட்டில் உள்ள பெண் பறவையும் உணவின்றி இறந்து விடும். உலகம் முழுவதும் 54 வகை இருவாச்சிகள் இருக்கின்றன. இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகள், அருணாசலப்பிரதேசம், அந்தமான் தீவுகள், நேபாளம் ஆகிய இடங்களில் வாழ்கின்றன.  

இந்தியாவில் 9 வகை இருவாச்சிகள் உள்ளன. தென்னிந்தியாவில்  4 வகையான இருவாச்சிகள் பறவைகள் காணப்படுகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் காணப்படும் நான்கு வகை இருவாச்சிப்பறவைகள் பெரும்பாலான இருவாட்சி, மலபார் இருவாட்சி , சாம்பல் நிற இருவாட்சி . கேரள மாநிலத்தில் இருவாச்சியை  மாநிலப் பறவையாக அறிவித்துள்ளன. 

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி மற்றும் முதுமலை பகுதியில் இருவாச்சி பறவைகள் உள்ளன. இவற்றில் பெண் பறவைகளுக்கு உணவு தேடி ஆண் பறவைகள் பல கிலோமீட்டர் தூரத்தில் சென்று  பழங்கள் உள்ளிட்ட உணவை சேகரித்து கொண்டு செல்கின்றன.  மனித நடமாட்டத்தை அண்டாத இது போன்ற பறவைகள் உணவு தேடி பறந்து செல்வது பார்ப்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.   

குன்னூர் பள்ளத்தாக்கில் பத்திற்கும் மேற்பட்ட பறவைகள் பறந்து செல்லுவதை கண்டபோது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காதலின் எடுத்துக்காட்டாக உள்ள இந்த பறவை இனத்தினை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *