டிசைன் டிசைன்னா கிளம்பிட்டாங்கய்யா… கோவைக்கும் கொள்ளைக்கும் அப்படி ஒரு பொருத்தம்…!

லோன் வேண்டுவோரின் ஆவணங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் லோன் செயலி மூலம் லட்சக்கணக்கில் கடனாக பணம் பெற்று நூதன கொள்ளை வாடிக்கையாளர்களின் ஆவணங்களை கடன் பெறுவோரிடம் சமர்பித்து, தனது அலைபேசி நெம்பர் மற்றும் மெயில் ஐடிக்களை தந்து பண பரிவர்த்தனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தன 

தனியாக நிறுவனத்தையே நடத்தி நூதன கொள்ளையில் ஈடுபட்ட நபரை கைது செய்த சிட்டி சைபர் கிரைம் தனிப்படை போலிஸார் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 8 செல்போன் 26 சிம்கார்டுகள் 11 பேன் கார்டு, 12 ஆதார் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை, ரெண்டல் ஃபேக் அக்ரீமண்ட், 6,000 வாடிக்கையாளர்களின் தரவுகள், கம்பியூட்டர், மோடம் பறிமுதல்

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வசிப்பவர் யுவராஜ பாண்டியன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் கடன் பெற முயற்சித்திருக்கின்றார். இந்த நிலையில் இவருக்கு டி எஸ் பேங்கிங் சொல்யூஷன் என்ற நிறுவனத்தில் இருந்து அழைப்பு ஒன்று வந்திருக்கின்றது. அப்போது தாங்கள் லோன் பெற்று தருவதாக தெரிவித்து அதற்கான ஆவணங்கள் வேண்டும் என்றும் கேட்டு இருக்கின்றனர். 

அவர்கள் கேட்ட ஆதார் கார்டு, பான் கார்டு, போட்டோ போன்ற ஆவணங்களை தந்திருக்கின்றார். ஆனால் லோன் கிடைக்கப்பெறவில்லை. இதுகுறித்து அந்த கம்பெனி பெண் ஊழியர்களிடம் பேசும் பொழுது லோன் தருவார்கள் காத்திருங்கள் என்று தெரிவித்திருக்கின்றனர். இதனை நம்பி சில காலம் காத்திருந்த யுவராஜ பாண்டியன் காலம் தாமதம் ஆவதனால் லோன் தர மாட்டார்கள் என நினைத்து கம்பெனி ஒன்றில் கடன் கேட்டு அழைத்ததை ஆவணங்களை தந்திருப்பதனை மறந்திருக்கின்றார் . 

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக அவருக்கு வங்கி ஒன்றில் இருந்து பேங்க் ஏடிஎம் கார்டு வந்திருக்கின்றன. தனக்கே தெரியாமல் வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டிருப்பதனையும், அதற்கு பேங்கு ஏ டி எம் கார்டுகள்  வீட்டிற்கு வந்து இருப்பனையும் பார்த்து அதிர்ந்திருக்கின்றார். உடனடியாக வங்கிக்கு சென்று பார்த்த பொழுது அதில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேலாக பணம் எடுக்கப்பட்டு இருப்பதையும், கிரெடிட் கார்டு மேலமாக பணம் எடுக்கப்பட்டதும் வங்கியின் மூலம் தெரிந்திருக்கின்றன. 

இதனால் தன் ஆவணங்களை தவறாக பயன்படுத்தி, முன்பு ஆவணங்களை பெற்ற நிறுவனம் நூதன கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதனை அறிந்து யுவராஜ் பாண்டியன், டி எஸ் சொலுசன் கம்பெனி ஊழியர்களிடம் அழைத்து பேசியிருக்கின்றார். அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலை தந்தனால் தான் ஏமாற்றப்பட்டதனை தெரிந்துகொண்ட யுவராஜ பாண்டியன் சிட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் தந்திருக்கின்றார். 

வழக்கமாக ஓடிபி கேட்டு பணம் திருடும் கும்பல், மொபைல் போனை ஹேக் செய்து டேட்டாவை திருடி பணம் திருடும் கும்பல் பற்றி அறிந்திருந்த சைபர் கிரைம் இந்த வழக்கை புதுமையாக பார்த்திருக்கின்றது. உடனடியாக சிட்டி போலீஸ் கமிஷனரான பாலகிருஷ்ணண் உத்தரவின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அருண் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர்கள் முத்து, சிவராஜ் பாண்டியன் மற்றும் காவலர்களை உள்ளடக்கிய தனிப்படை போலிஸார் குற்றவாளியை பிடிக்க முனைப்பு காட்டியிருக்கின்றனர்.  

419,420 IPC & 66C 66D of IT Act பிரிவின் கீழ் வழக்கு பந்திந்து நடவடிக்கையை துரிதப்படுத்தியிருகின்றனர். அறிவியல் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி குற்றவாளியை பிடிக்க திட்டமிட்டிருக்கின்றனர். அதன் அடிப்படையில் புகார் தாரரின் பேரிலே ஆரம்பிக்கப்பட்டிருந்த வங்கி கணக்கில் இணைக்கப்பட்டிருந்த மெயில் ஐடி மற்றும் அலைபேசியை ட்ராக்கிங் செய்திருக்கின்றனர். அப்பொழுது அந்த மெயில் ஐடி மற்றும் அலைபேசியை தினேஷ் என்ற நபர் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தன. உடனடியாக தினேஷின் இருப்பிடத்தை ட்ராக்கிங் செய்த சைபர் கிரைம் போலீசார் அவனை நெருங்கி இருக்கின்றனர். 

அப்போது அந்த நபர் டி எஸ் பேங்கிங் சொல்யூஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தது தெரிய வந்தன . நிறுவனத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்களை பணிக்கு வைத்திருப்பதும் தெரிய வந்தன. சைபர் ஸ்கேமினை நடத்தி வருகின்ற இடத்திற்கு சென்ற போலீசார் தினேஷிடம் விசாரணை நடத்தினர் . அப்பொழுது தினேஷ் அரங்கேற்றிய மோசடிகள் தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தன . பொறியியல் பட்டதாரியான தினேஷ் கிரெடிட் கார்டு சேல்ஸ்மேனாக பணியாற்றி இருக்கின்றான். 

கடும் நெருக்கடியில் இருந்த தினேஷ் பின்னர் கிரெடிட் கார்ட் வேண்டுவோருக்கு கிரெடிட் கார்ட் பெற்று தர நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டு இருக்கின்றான். அதன் அடிப்படையில் நிறுவனத்தை ஆரம்பித்து கிரெடிட் கார்டு பெற்று தந்து வந்த தினேஷ், தொழிலில் பெரும் லாபம் இல்லாததால் மோசடியில் ஈடுபட முடிவெடுத்தருக்கின்றான். அதன் அடிப்படையில் ஐந்து பெண்களை பணிக்கு நியமித்து மோசடிகளை அரங்கேற்ற ஆரம்பித்திருக்கின்றான். அதாவது வாடிக்கையாளர்களுக்கு அலைபேசியில் அழைத்து லோன் வேண்டுமா? கிரெடிட் கார்டு வேண்டுமா? என பெண்களை வைத்து கேட்டிருக்கின்றான். 

அப்போது கார்டு வேண்டும் என்று சொன்னால் உடனடியாக அந்த கால் தினேஷுக்கு மாற்றப்படும். தங்களின் நிறுவனத்தின் ஊழியர் இனி லோன் தொடர்பான நகர்வுகளை பார்த்துக்கொள்வார் என்று பெண்கள் தெரிவிக்க, வாடிக்கையாளர்களை தினேஷ் நேரடியாக டீல் செய்கின்றான். அப்போது கேட்க்கப்படுகின்ற ஆவணங்களை பெற்றுக்கொள்ளும் தினேஷ் அதனை வைத்து ஆன்லைன் அப்பிளிகேசனில் லோன் அப்ளை செய்கின்றான். அந்த ஆவணங்களை வைத்து அக்கவுண்டையும் ஓபன் செய்கின்றான். செயலி மூலம் பெறப்படும் லோனை அந்த வங்கி கணக்கில் வரவு வைக்கின்றான். பேங்கில் அக்கவுண்டு ஓபன் செய்யப்படும்போது அந்த வங்கி கணக்கில் தினேஷின் கையில் இருக்கின்ற அலைபேசி நெம்பர் மற்றும் தினேஷால் ஆரம்பிக்கப்பட்ட மின்னஞ்சல் கணக்கினை இணைத்துவிடுகின்றான். 

அவ்வாறு இணைக்கும் போது வங்கி கணக்கில் பெயர் ஆவணங்களை தந்தவரின் பெயரில் இருந்தாலும் அதன் மெயில் அக்ஸஸ் ஓடிபி நெம்பர் வருவதெல்லாம் தினேஷ் கையில் இருக்கின்ற ஃபோனுக்காகவே இருக்கும். அப்போது லோன் , கிரிடிட் கார்டு அப்ளை செய்தால் உடனடியாக பணம் கிரிடிட் ஆணவுடன், தனது சொந்த அக்கவுண்டுக்கு தினேஷ் மாற்றி பணத்தை டிராஃப்டு செய்திருக்கின்றான். இது ஆவணங்களை தந்த நபர்களுக்கு தெரியாது. பேங்கிலிருந்து வங்கி பாஸ்புக், ஏ டி எம் கார்டுகள், கிரிடிட் கார்டுகள் ஏதேனும் வந்தாலும் கொரியரில் இருந்து தினேஷ் தந்திருக்கும் அலைபேசிக்கு அழைப்பதனால், பார்சலை வீட்டின் முகவரில் தர வேண்டாம் என்றும் தான் நேரடியாக பெற்று கொண்டு செல்வதாகவும் தெரிவித்து தினேஷே நேரடியாக சென்று பார்சலை பெற்று உண்மை வாடிக்கையாளர்களுக்கு பார்சல் செல்லாமல் செயல்பட்டிருக்கின்றான். 

இப்படி பலே திருட்டு வேலைகளில் ஈடுபட்ட தினேஷ் நடத்துகின்ற கம்பெனியை தணிக்கை செய்த சைபர் கிரைம் தனிப்படை போலிஸார், Mobile phones 8 (Android mobiles), Sim card 26, Pan card-11, Aadhar-12, Voter ID – 1 Fake Rental agreement-1, ICICI tag bill-16, Customer base data details (சுமார் 6000 வாடிக்கையாளர் பற்றிய விபரங்கள்), Documents received from customers – 1 bunch, Intel icore5 CPU- 1, and other document உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்திருக்கின்றனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சைபர் கிரைம் தனிப்படை போலிஸார் பாத்திருக்கின்றனர். ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கையில் தினேஷ் பலரிடம் அவர்களுக்கே தெரியாமல் நூதன கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாமென நினைக்கின்றனர் . 

எனவே இது போன்று மோசடி நடைமுறையில் மாட்டி பணத்தினை இழந்திருந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலிஸில் புகார் தர வலியுறுத்தியிருக்கின்றனர். அதே போன்று லோன் , கிரிடிட் கார்டு உடனடியாக பெற்று தருவதாக அழைத்தால் அவர்களிடம் விலை மதிப்பற்ற ஆவணங்களை தந்துவிடக்கூடாதென போலிஸார் அறிவுரை தெரிவித்திருக்கின்றனர். நூதன கொள்ளையனை கைது செய்து வழக்கை திறன்பட கையாண்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாரை சிட்டி போலிஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் வெகுவாக பாராட்டியிருக்கின்றார் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *