நடுவீட்டில் மாட்டை கொன்று புதைத்து செய்வினை செய்த நபரை வச்சு செய்த நீதிமன்றம்…! 

திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஜேசிபி எந்திரத்தைக் கொண்டு மாட்டின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ஸ்பென்சர் காம்பவுண்ட் திருவள்ளுவர் 1வது  தெருவில் ராஜா முகமது என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை மணிகண்டன் என்பவருக்கு  மாநகர காங்கிரஸ் கட்சி  அலுவலகத்திற்காக ராஜா முகமது கடந்த 2018 ஆம் ஆண்டு வாடகைக்கு விட்டுள்ளார். முறையாக வாடகை கொடுத்து வந்த மணிகண்டன் கொரோனாவிற்கு பின் சரியாக  வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. வாடகை தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ராஜா முகமது பலமுறை மணிகண்டனிடம் கேட்டும் பணம் தரவில்லை. 

இது தொடர்பாக இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.  தகராறின் போது மாந்திரீகம் செய்து பசுவை பலியிட்டு வீட்டில் புதைத்துள்ளதாகவும் அதே போல் உன்னை கொலை செய்து புதைத்து விடுவேன் என மணிகண்டன் மிரட்டியதாக கூறப்படுகிறது இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ராஜா முகமது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது புகார் அளித்தார் 

புகாரின் பேரில் போலீசார் தற்பொழுது 429 மிருக வதை தடை சட்டம், 508 மிருகங்களைக் கொன்று புதைப்பது, மற்றும் 506/1 என்ன மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து கடந்த 14.10.22  தாசில்தார் ரமேஷ் பாபு தலைமையில் கால்நடை மருத்துவர்கள் ஜேசிபி எந்திரத்தை கொண்டு குழி தோண்டி அதில் புதைக்கப் பட்டிருந்ததில் இருந்து மாதிரி எலும்பு சதை ஆகியவற்றை எடுத்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

ஆய்வின் முடிவில் அங்கு புதைக்கப்பட்டு இருப்பது மாடு என தெரியவந்தது. இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ராஜா முகமது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் அதில்  மாடு புதைக்கப்பட்ட இருப்பதால் குடியிருப்பு பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் உடனடியாக புதைக்கப்பட்ட மாடுவை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார் 

இவரது கோரிக்கை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் மீண்டும் அதே இடத்தில் குழியை தோண்டி புதைக்கப்பட்ட மாட்டின் உடல் பாகங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது அதன்படி இன்று 16.02.23 மீண்டும் அதே இடத்தில் குழி தோண்டப்பட்டு அதிலிருந்து  மாட்டின் உடல் பாகங்களை நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் அப்புறப்படுத்தினர் இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *