பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் நாளை 200 நாள், 1200 போலீசார் குவிப்பு…!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 200 வது நாளாக நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க 1200 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் .

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம்,அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம்,சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4750 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இரவு நேரங்களில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 4 முறை தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர் . இந்நிலையில் நாளை 200 வது நாள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் இதில் கிராம மக்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்க உள்ளார்.

போராட்டத்தின் போது எவ்வித சம்பவிதங்களும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 7 ஏடிஎஸ்பி 28 டிஎஸ்பி உட்பட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *