ரெட் ஜெயிண்ட் எல்லா படங்களையும் அடி மாட்டு விலைக்கு வாங்கி அராஜகம் செய்கிறது…!-முன்னாள் முதல்வர் 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் வேப்பம்பாளையத்தில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். பின்னர் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்

ஈரோடு தேர்தலில் வெற்றி குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். ரெட் ஜெயிண்ட் நிறுவனம் எல்லா படங்களையும் அடி மாட்டு விலைக்கு வாங்கி வெளியிட்டு வருகின்றனர். கோடி கோடியாக சம்பாரித்து வருகிறார்கள். 150 படங்கள் முடங்கியுள்ளது. மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்குது திமுக ஆட்சியில். கடுமையான மின் கட்டணம் உயரம், சொத்து வரி ஏற்ற மாட்டார்கள் என்று  சொன்னாங்க தேர்தல் வாக்குறுதியில் சொன்னாங்க.. ஆனா ஏத்திட்டாங்க, குடிநீர் கட்டணம் உயர்த்தி உள்ளனர். 

சாதாரண குடும்பத்தினர் 5 ஆயிரம் இருந்தால் குடும்பத்தை நடத்தல்லாம். ஆனால் தற்போது 7 ஆயிரத்திற்கும் மேல் விலைவாசி உயர்ந்துள்ளது. ஏழைக் மக்களை வாழ வைத்தவர்கள் அதிமுகவினர். அம்மா உணவகம் மூலம் மூன்று வேலையும் சுட சுட உணவு கொடுத்துள்ளோம், 2 வருடத்தில் 1 லட்சத்து 62 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது திமுக அரசு என்று குற்றம் சாட்டினார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் 21 மாசத்துக்கு 21 ஆயிரம் கொடுக்கனும்!! திமுக வந்தா கேட்டு வாங்குங்க, உரிமைத்தொகை எங்கன்னு கேளுங்க. சிலிண்டருக்கு மானியம் 100 ரூபாய் கொடுத்தாங்களா?? 5 இலட்சம் பேருக்கு முதியோர் உதவி தொகை கொடுப்பதாக அரசானை கொண்டு வந்தோம். அதை திமுக ஆட்சிக்கு வந்து நிறுத்திவிட்டது.. 

அம்மா இரண்டு சக்கர மானியம் கொடுத்தோம். தாலிக்கு தங்கம் கொடுத்தோம். இரு பவுன் 43 ஆயிரம்..  ஏழையாக இருந்தாலும் தாலி தங்கத்தில் இருக்க வேண்டுமென கொடுத்தோம் அதையும் நிறுத்து விட்டார்கள். மடிக்கணினி ஒன்று 12 ஆயிரம். 53 இலட்சம் மாணவ மாணவிகளும்கு கொடுத்துள்ளோம். அதையும் நிறுத்தி விட்டார்கள்.. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆனது ஏன் நீட் தேர்வு ரத்து செய்யவில்லை.. நீட் தேர்வு செய்யும் ரகசியம் இருப்பதாக உதயநிதி சொன்னார்?? இப்பாவது சொல்லுங்க. 

கவர்சிகரமான பொய் சொல்லி வெற்றி பெற்றுள்ளனர். திமுகவுக்கு இந்த தேர்தலில் எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும் பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வர முடியாது என்பதை நிரூபிக்க இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *