இஸ்ரோ எஸ்.எஸ்.எல்.வி டி2  ராக்கெட்டை இன்று விண்ணில் ஏவுகிறது.

இன்று காலை சரியாக 9.18 க்கு ஸ்ரீஹாரிகேட்டாவில் உள்ள சதீஸ் தாவான் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ஏவப்படும் இந்த ராக்கெட் மூலம்  EOS – 07 மற்றும் ஜானஸ் 1  ( janus -1 ) மற்றும் அசாடி சாட்-2 ( AZAADI SAT-2 ) ஆகிய செயற்க்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. 

இந்த முன்று செயற்க்கை கோள்களும் சரியாக 450 கிலோமீட்டர் புவி சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளன. சரியாக 15 நிமிடம் நடைபெற இருக்கும் இந்த பயணத்தில் 175.2 கிலோ எடை உள்ள செயற்க்கை கோள்களை இந்த ராக்கெட் விண்ணிற்கு எடுத்து செல்கிறது என இஸ்ரோ தரப்பில் இருந்து தெரிவிக்கபட்டுள்ளது. 

குறிப்பாக இந்த எஸ்.எஸ்.எல்.வி டி 2 வகை ராக்கெட் குறைந்த செலவில் விண்வெளிக்கு செயற்க்கை கோள்களை அனுப்ப வடிவமைக்கப்பட்ட ராக்கெட் ஆகும். 34 மீட்டர் உயரமும் 2 மீட்டர் விட்டம் கொண்ட இந்த ராக்கெட் 120 டன் எடை கொண்டது.  இதில் 500 கிலோ வரை எடை உள்ள செயற்க்கைகளை மட்டுமே விண்ணிற்கு அனுப்ப முடியும் என்பது குறிப்பிடதக்கது. 

செயற்க்கை கோள்களை பொருத்தவரை EOS -7  இஸ்ரோவால் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கபட்ட செயற்க்கைகேள் ஆகும். janus -1 செயற்க்கைகோள் அமெரிக்க நிறுவனமான ANTARIS க்கு செந்தமான செயற்க்கைகோள் ஆகும்.

மேலும் ,அசாடி சாட்-2 ( AZAADI SAT-2 )  செயற்க்கைகோள் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான செயற்க்கை கோள் ஆகும். இது நாடு முழுவதும் உள்ள 750 பெண் மாணவர்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கபட்ட செயற்க்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *